பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

509


சுப்ரமணியம் தலைமையில் பேசும்போது, நம் சமுதாய இழிவை ஒழிக்க விரைவில் மாபெரும் கிளர்ச்சி துவக்குவோம் என்றார். சென்னை மாவட்ட சமூக சீர்திருத்த மாநாட்டிலும், கடவுள் மத சாஸ்திரங்களைப் பாதுகாக்கும் மத்திய ஆட்சி ஒழிந்தாக வேண்டும், என்றார் பெரியார். 20.4.69 அன்று இந்த மாநாடு வே.ஆனைமுத்து தலைமையில் நடந்தது. சேலம் பச்சைமுத்து திறப்பாளர் : மயிலை சம்பந்தமூர்த்தி கொடி ஏற்றியோர்; தே.மு. சண்முகம் வரவேற்பாளர்.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குத் தனி இலாக்கா ஏற்படுத்தப்படும். வறட்சி நிவாரணத்துக்கு 20 கோடி ரூபாயில் திட்டம் தந்துள்ளோம். மத்திய அரசு இதற்குப் போதிய அளவு உதவாவிடில் மக்கள் நாட்டுப் பிரிவினை கோரக் கூடும். இப்போதெல்லாம் தி.மு.க. ராஜாஜியைக் கலந்தோசிப்பது இல்லை என சி.சுப்ரமணியம் ஏன் அங்கலாய்க்கிறார்? மாணவர்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியை ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். நகர சபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கே மகத்தான வெற்றி! ஏழாக இருந்தது; இப்போது 47 நகரசபை தி.மு.க.வசம்- என்றெல்லாம் முதல்வர் கலைஞர் தந்த செய்திகளை, முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது “விடுதலை", 107 ஆண்டுகளில், முதல் தமிழர் பிரதம நீதிபதி என்று பாராட்டியது "விடுதலை" 2.5.69 அன்று. 3ந் தேதி முதல் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் அட்வகேட் ஜெனரல் ஆனார். ஜனாதிபதி ஜாகீர் உசேன் 3.5.69 அன்று 11.20 மணிக்குக் காலமானார். வி.வி.கிரி தற்காலிக ஜனாதிபதியாய்ப் பொறுப்பேற்றார்.

1.5.69 மே நாள் சென்னைக் கடற்கரையில் பேசிய பெரியார், புதிய வரலாறு படைத்த தலைமை நீதிபதி நியமனத்தைப் பாராட்டி, இதே போல் சாதி-மத விகிதாசரத்தின்படி, அரசாங்கம் எல்லாப் பதவிகளிலும் நியமனம் செய்துவர வேண்டும் என்றார். 3ந் தேதி பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ.கோவிந்தசாமியைப் பெரியாரும் மணியம்மையாரும், 16ந் தேதி சென்று கண்டனர்.“அந்தோ பெருந்தகையாளர் மறைந்தார்” என்று “விடுதலை” கதறியழுதவாறு, 18ந் தேதி மாலை 3.30 மணிக்கை மறைந்த அன்னாரது சடலத்தின் மீது, 19 காலை 9.30 மணியளவில் பெரியாரும் மணியம்மையாரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் 1:6.69 அன்று பெரியார் தலைமையில் கலைஞர் ஏ. கோவிந்தசாமியின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். நாம் மானம் பெறவும், நமது ஈனஜாதித்தனம் ஒழியவும், நான்கு காரியங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நெற்றிக்குறி இடக்கூடாது. கோயில்களுக்குக் செல்லக் கூடாது. பண்டிகைகள்