பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஜெமினி தயாரித்த எல்லாப் படங்களுக்கும் "விடுதலை"யில் விளம்பரம் வெளியிட்டு வந்தார். 2-9-69 அன்று பெரியாரும், மணியம்மையாரும் - திருமதி பட்டம்மாள் வாசனிடம் துக்கம் விசாரிக்கச் சென்றனர். மகன் பாலுவும், மணியனும் வரவேற்றனர். 5-ந் தேதி மயிலை இசபெல்லா நர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்று வந்த ராணி அண்ணியாரைப் பெரியாரும், மணியம்மையாரும் சென்று பார்த்தனர். முதல்வர் கலைஞருடைய முயற்சியால், வானொலியில் "பிராந்தியச் செய்தி"களாயிருந்தது, 1-9-69 முதல் "மாநிலச் செய்தி"களாக மாறிற்று. 26-8-69 அன்று தியாகராயநகர், தருமபுரம் ஆதீன நிலையத்தில், துணை வேந்தரான சுந்தர வடிவேலு, மேலவை உறுப்பினரான குன்றக்குடி அடிகளார், இவற்றுக்குக் காரணமான கலைஞர் ஆகியோருக்குப் பாராட்டு வழங்கப் பெற்றது.

மது விலக்கு அமுலினால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு மான்யம் தராவிட்டால், மதுவிலக்கை ரத்து செய்ய நேரும், என்று முதல்வர் கலைஞர் கூறியதை, "விடுதலை" முதல் பக்க பேனர் செய்தியாக 7-9-69 அன்று வெளியிட்டது. 9-ந் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எஸ். மகராஜன், பி.எஸ். சோமசுந்தரம் நியமனம் பெற்றுப், பெரியாரின் கனவு நனவாகச், செய்தியாயினர். தேசிய மாணவர் படையின் ஆணைச் சொற்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்று. மத்திய அமைச்சரவையைச் சார்ந்த எம்.ஆர். கிருஷ்ணா சென்னையில் 12-ந் தேதி நேரில் கூறினார். அண்ணாவின் உறுதி வென்றது! 12-ஆம் நாள் பெரியார் வேலூர் மருத்துவமனை சென்று வந்தார்.

இந்த ஆண்டு பெரியார் 91-ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதூகலத்துடன் கொண்டாடப் பட்டது. இராமநாதன் மன்றத்தில் கவியரங்கம் 11-30க்குத் துவக்கம். வீரமணி வரவேற்றார். அடிகளாரும், பெரியாரும் அமர்ந்திருந்தனர். வேலூர் மருத்துவ நிபுணரான டாக்டர் பட், திருமதி பட், டாக்டர் ஜான்சன் ஆகியோர் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். அமைச்சர் மா. முத்துசாமி கவியரங்கத்தலைவர். கவிஞர்களான கருணானந்தம், பாலசுந்தரம், புதுவை சிவப்பிரகாசம், பழம் நீ, முத்தன், குடி அரசு ஆகியோர் பெரியாரின் - சிறப்பியல்புகளைக் கவிதைகளில் பொழிந்தனர். பிற்பகல் 2-30 மணிக்குத்தான் முடிந்தது. “நான் போதையில் இருக்கிறேன். இப்பேர்ப்பட்ட புகழ் மொழிகளைக் கேட்டு, நான் சகித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது தான் கஷ்டம்! என்றார் பெரியார். அனைவர்க்கும் பெரியார் இல்லத்தில் செஞ்சோறு (பிரியாணி) வழங்கப்பட்டது. மாலையில் மாபெரும் ஊர்வலம். பெரியாரும்' என். வி. நடராசனும் முத்துப் பல்லக்கில் அமர்ந்து வந்தனர். முதல்வர் கலைஞர், சிறிது தூரத்தில் வந்து ஏறிக்கொண்டார்.