பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

519


மணிக்கூண்டருகில் வந்ததும், அங்கே எதிரில் அமர்ந்திருக்கும் அண்ணாவைப் பார்ப்பது போல, முழு உருவ அளவில் வெண்கலத்தால் செய்யப்பட்ட, நிற்கும் நிலையில் நிறுவப்பட்ட பெரியார் இலையினைக் கலைஞர் திறந்து வைத்தார். நாவலர் தலைமையில், ஊர்வலம் திலகர் திடலை அடைந்ததும், பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கலைஞர் பேசும்போது "பெரியார்தான் தமிழக அரசு. தமிழக அரசுதான் பெரியார். நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்பதற்கு ஒரே சான்று, அதிர்ஷ்டமில்லாததென்று சொல்லப்படும் 13 தான் இன்றைய அமைச்சர்களின் எண்ணிக்கையாகும். நாங்கள் பெரியாரின் ஆதரவு பெற்றவர்கள் அல்ல. பெரியாராலேயே ஆளாக்கப்பட்டவர்கள்” என்று உணர்ச்சி பொங்க உரைத்தார். நாவலர் 1,001 ரூபாய் கொண்ட பொற்கிழியினைப் பெரியாரிடம் வழங்கிய போது, நகைச்சுவையாகப் பெரியார் “சரியாயிருக்குமா?" என்று கேட்க, அந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் கொல்லௌச் சிரித்தது, அலையோசையாக ஒலித்தது. என்.வி. நடராசன், மா. முத்துசாமி, திருவாரூர் கே. தங்கராசு ஆகியோரும் பேசினர். மணியம்மையார் டாக்டர் பட் அவர்களிடம் மருத்துவமனைக்கு அன்பளிப்பாக ஏதோ தொகை வழங்கினார்கள். டாக்டர் இருவருக்கும் முதல்வர் பொன்னாடை போர்த்தினார். வீரமணி வரவேற்றுப் பேச, கா.மா. குப்புசாமி அனைவர்க்கும் மாலை சூட்டினார். தோலி ஆர், சுப்ரமணியம் நன்றி நவின்றார்.

இந்த ஆண்டு திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நாள் 27-ந் தேதி நடைபெற்றது. அமைச்சர் என்.வி. நடராசன், கல்வி இயக்குநர் லா.வே. சிட்டிபாபு, போலீஸ் அதிகாரி ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். 28 ந் தேதி பெரியார் 91-ஆவது பிறந்த நாள் விழா, சுய மரியாதைக் குடும்பங்களின் விருந்து, கருத்தரங்கு. பாராட்டுவிழா அனைத்தும் சிறப்புற நடந்தன. மதியழகன், சாதிக் பாஷா, ஓ.பி. இராமன், என்.டி. சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கம் போல் இரு நாட்களிலும் பெரியார் உபசரிப்பும் பேருரையும் உண்டு. “நம்முடைய எந்தச் சமுதாயப் புரட்சிக்குமே முட்டுக்கட்டை போடுவது பார்ப்பனர்தான். பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்கள். அவர்கள் மிரட்டலும் இனிப் பலிக்காது. ஒரு மலையாளப் பழமொழி என் நினைவுக்கு வருகிறது. “பொரைக்கொரு முத்தி அரைக்கொரு கத்தி" என்றால் வீட்டுக்கு ஒரு கிழவியும், இடுப்புக்கு ஒரு கத்தியும் அவசியம் தேவை என்பது. ஆமாம்! என்று பேசினார் பெரியார். சென்னை இராஜாஜி மண்டபத்தில் அண்ணா படத்தைப் பிரதமர் இந்திராகாந்தி 6-10-69 அன்று திறந்து வைத்தார். ஒரு படம் சட்ட மன்றத்திலும் வைக்கப்பட்டது.