பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

531


பிரசுரமாயிற்று. 9-1-70 "இந்து" பத்திரிகை இந்தப் பேட்டி குறித்துப் பாராட்டியிருந்தது. பெரியாரிடம் சரளமாகக் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகட்கும், ஒளிவு மறைவின்றிப் பதில் சொன்னார். அந்தக் காலத்தில் பெரியார் வீட்டில் தர்மத்துக்காக வைத்த தண்ணீர்ப் பந்தலிலேயே தீண்டாதவர்க்கு மூங்கில் குழாயும், மற்ற வகுப்பாருக்குத் தம்ளரும் வைத்தார்களாம். மதத்துக்கு விரோதமாகப் பேசாமல், சாதியை மட்டும் ஒழிக்கப் பிரச்சாரம் செய்யலாமே என்ற கேள்விக்கு, “அதைப் பிரிக்க முடியாதுங்களே அய்யா! மதம் வேற சாதி வேறேன்னு பிரிக்கவே முடியாதே!" என்றார் பெரியார். ஒழுக்கம் குறைந்து வருவதால், ஒன்று அரச தண்டனைக்கு மக்கள் பயப்பட வேண்டும். அல்லது ஆண்டவன் தண்டிப்பாரே என்றாவது பயம் இருக்க வேண்டாமா என்ற வினாவுக்குப் பெரியார் - இனிமேல் எந்தக் காரணம் சொல்லியும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு எல்லை வரை போய்த்தான் திரும்புவார்கள். அது வரையில் ஒழுக்கம் என்று பேசுவதால் ஒரு பயனுமில்லை என்றார். தம் கருத்தே, ஜனநாயகம் வந்த பிற்பாடுதான் அதிகமாக ஒழுக்கம் கெட்டுப் போனது, என்றார் பெரியார். சிக்கனத்தைப் பற்றிக் கேட்டபோது, காசை இழுத்துப் பிடித்தோம். புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது. சிக்கனம் நமக்கு ஒரு ஹேபிட் (habit) அவ்வளவுதான் பணத்தை என்ன செய்வது என்று இப்போதுதான் யோசித்துக்கொண்டு வருகிறோம் என்றார். "பொது நலத்துக்காக ஒருவன் வரவேணும்னா அவன் கிட்டே ரெண்டு குணம் இருக்கணும். அதிலேயே சாப்பிடறோம்கிற நிலைமை இருக்கக்கூடாது. பொது நலத்தினாலே அவன் சுயநலத்துக்காக ஒரு பலன்கூட எதிர்பார்க்கக்கூடாது. அவன் வாழ்க்கைக்கு வேறே ஏற்பாடுகள் பண்ணிக்கணும்" என்றார் பெரியார்.

பெரியாரின் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை இந்தியிலும் இங்லீஷிலும் பெயர்த்தெழுதி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் புத்தகங்களாக வெளியிட்டிருந்தார்கள். அதற்கு அங்கு நல்ல வரவேற்பு! காங்கிரஸ் ஆளும் அந்த மாதிலத்தின் அரசு, இந்தி, ஆங்கில நூல்களைத் தடைசெய்துவிட்டது! மதவாதிகளின் மனத்தை அது புண்படுத்துகிறதாம். 3-ந் தேதி இச்செய்தி கிடைத்தது. சென்னையில் முன்னாள் துணைமேயராம் டி.ஜி. லெட்சுமணசாமி என்பவர் அரசுத் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதிப், பெரியார் சிலைக்கு அடியில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரியிருந்தாராம். ஒருவருக்குச் சிலை எழுப்புகையில், அடியில் அவரது சிந்தனைகளைப் பொறிப்பது வழக்கந்தான் என்று பதில்' தரப்பட்டது அவருக்கு!

"கண்ட்ரோல், ஜனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் நியூசென்சாக இருந்தது. அதை எடுத்தது இருவருக்கும் அனுகூலமாகும். கண்ட்ரோல்