பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

539


இரட்டை முட்டாள் என்பேன். கடவுளுக்கு உருவமில்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொள்கிறாய் பின் அதற்கு பெண்டாட்டி வைப்பாட்டி பிள்ளைகுட்டி ஏது? இதைக் கேட்டால் மனம் புண்படும் என்கிறாய் மடையர்களின் மனம்தான் புண்படும். உலக மாறுதலின் வேகம் என்ன தெரியுமா? இன்றைக்குப் போப்பாண்டவரையே கல்லால் அடித்ததாகச் சேதி வந்ததே - இந்த சங்கராச்சாரிக்கு அந்த நிலை ஏற்படாதா? நாட்டில் பகுத்தறிவு பரவுவதற்குத் தடையாக இருப்பதே இவர்தானே?" என்றும் வினா எழுப்பினார்.

30-ந் தேதி ஓரளவு உடல் நலம் பெற்றுக் கண்கொடுத்த வனிதம் நிகழ்ச்சிக்குச் சென்று, சுற்றுப்பயணம் தொடர்ந்தார் பெரியார். அங்கு பேசும்போது, பெண் கடவுள்களுக்குப் பூசை செய்யவாவது, பெண் பூசாரிகளை நியமிக்கலாமே என்ற கருத்தைத் தெரிவித்தார். 6-5-70 அன்று சேலம் பி. ரத்தினசாமிப் பிள்ளை அவர்களின் நினைவுநாளில் பங்கேற்றுச், சென்னை கண் மருத்துவ மனையில் முதல்வர் கலைஞரை மறுநாள் காலை 11-30 மணிக்குப் பார்த்து : நலம் விசாரித்தார். முதல்வரை 2-ந்தேதியன்று ஆளுநர் உஜ்ஜல்சிங், ஜனாதிபதி வி.வி.கிரி ஆகியோர் பார்த்துச் சென்றனர். 8-ந்தேதி வீடு திரும்பிய கலைஞர் 1 மாதம் ஓய்வில் தங்கினார். 9-5-70 தலையங்கப் பகுதியில் "விடுதலை"யில் பெரியார் "மாவட்டத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். "தஞ்சை, வேலூர், சேலம், தர்மபுரி, காஞ்சி நீங்கலாக மற்ற மாவட்டத் தலைநகர்களில் அழிக்கப்பட இன்னும் ஒரு வார வாய்தா இருக்கிறதே! முக்கால் வாசிப்பேர் பலகையை எடுத்து விட்டார்கள். பிராமணாள் எழுத்தை அவர்களாகவே சிலர் அழித்து விட்டார்கள். சில இடங்களில் மறைத்து விட்டார்கள். நாம் இந்தப் பிரச்சினையில் எந்தவிதமான அசம்பாவிதத்துக்கும் இடம் தரக்கூடாது. இந்தக் கிளர்ச்சி இன்னும் 3 மாதமோ 5 மாதமோகூட நீடிக்கலாம். பாதகமில்லை. இதில் நாம் தோல்வியடைந்தால் கூடப் பரவாயில்லை " என்றார். “பகுத்தறிவுப் பள்ளி; அரிய வாய்ப்பு” என்று வீரமணி (ஆசிரியர்) எழுதிய துணைத் தலையங்கத்தில் “என்.எஸ். சம்பந்தம் பிரச்சாரப் பள்ளிப் போறுப்பாளராயிருப்பார். 10 நாள் நடைபெறும். கட்டணம் ரூ.20 நமக்குப் பிரச்சாரமே மிக இன்றியமையாததாக இருப்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நல்ல வண்ணம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என்று கோரியிருந்தது.

15-ந் தேதி மதுரையில் “பிராமணாள்" அழிப்பு வெற்றி பெற்றது. தொடர்ந்து பல ஊர்களிலும் அகற்றப்பட்டது. 17-5-70 அன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில், மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசுவுக்கு வீடு, கார் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலைஞருடன், பெரியாரும் பங்கேற்று, “இது தனித்தமிழர் ஆட்சி. தமிழ் நாட்டில் இனி வேறு ஆட்சி வரவிடமாட்டோம். நான் செய்ய