பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


எண்ணும் காரியங்களைத் தி.மு.க அரசு செய்து வருகிறது. அதனால் என் வேலை குறைகிறது" என்றார். 19-ந் தேதி 'தமிழர்களின் பொதுத் தொண்டு' என்னுந் தலையங்கத்தில், "இழிவு ஒழிப்பு நடவடிக்கை எனக்கு மட்டுந்தான் சொந்தமா? விளம்பரம் பெற்ற தமிழன் வேறு யாராவது எதிர்காலத் தமிழர்களின் நிலை பற்றிக் கவலைப்படுகின்றானா? இப்போது நமக்குத் தி.மு.க. ஆட்சி கிடைத்திருப்பதே மிகப் பெரிய வெற்றி. காங்கிரஸ்காரன் ஆட்சி இப்போது இருந்தால் இதெல்லாம் நடக்குமா? இனி அவன் வந்தாலும் இதை நடக்க விடுவானா? என்ன காரணம்? நமது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இலட்சியத்தில் ஒன்றாயிருப்பதுதானே காரணம்" எனப் பெரியார் தீட்டியிருந்தார்.

காந்திக்கும் நேருவுக்கும் பிறகு அண்ணாவின் மறைவுதான் இந்தியாவின் மிகப் பெரிய தேசிய இழப்பு என்று சென்னை வந்திருந்த மத்திய துணையமைச்சர் கடில்கார் 29-5-70 அன்று புகழ்ந்து கூறினார். "விடுதலை" 19-5-70 ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் நெய்வேலி கு. வீராசாமி என்பார், “தந்தை பெரியாரின் முழு வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும்" என்று கோரியிருந்தார். அந்தக் கடிதத்தினடியில் ஆசிரியர் குறிப்பாக, “விரைவில் அப்பணி தொடங்கப்பட இருக்கிறது" என்று காணப்படுகிறது. (அப்பணி தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லையே!) 1-6-70 அன்று பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார் நாகர்கோயில் இந்துக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார். 10-ந் தேதி காஞ்சி மணிமொழியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார், "ஒரு குடும்பம் போலிருந்து நாம் பொதுத் தொண்டாற்றி வந்தோம். கொள்கையில் மாற்றமில்லாவிட்டாலும் இரண்டு கழகங்களாய்த் தனித்தனியே பிரிந்து பணியாற்றியவர்கள், இப்போது இணைந்துவிட்டோம்! இதைப்பற்றிப் பொறாமையால் யாரும், ஏதும் சொல்லலாம். இதனால் ஒன்றும் குற்றமில்லை . இன்றையத் தி.மு.க. ஆட்சி, என் ஆயுள்வரை இருந்தால், நான் மனக்குறை இல்லாமல் சாவேன்!" என்று, உணர்ச்சி மேலிடக் கூறினார்.

கலைஞர் தமது பிறந்த நாள் விழாவில், “நான் பெரியாரின் மாணவன் என்பதில் தான் எனக்குப் பெருமை அதிகம்" என்று பூரிப்புடன் புகன்றார். தமிழக அரசின் சார்பில் “தமிழரசு" என்று ஒரு மாதமிருமுறை இதழ் வெளிவரும் என முதல்வர் கூற்றிக்கிணங்க, ஓர் அழகிய விளம்பரம் “விடுதலை" முதல்பக்கம் காணப்பெற்றது 15-6-70 அன்று.

பெரியார் கொட்டாம்பட்டியில் 5-ந் தேதி பேசினார்: “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது முட்டாள்தனமான பேச்சு. ஒரு கடவுளை நம்புவதால் ஏற்படும் முட்டாள் தனந்தான் ஆயிரம் கடவுளை நம்புவதாலும் ஏற்படுகின்றது. ஒன்றே குலம் ஒருவனே