பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

541


தேவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாயிருக்காது. தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகச் சொல்லப் பட்டதாயிருக்கும்" என்று மிக்க நம்பிக்கையோடு சொன்னார் பெரியார். கோவையை அடுத்த ஆலந்துறையில் 7-ந் தேதி ஒரு திருமண விழாவில் பேசும் போது, அங்கு விளக்கேற்றி வைத்திருந்ததாலோ என்னவோ, அதைப் பற்றிக் குறிப்பிட்டார். "யாரோ விளக்கை லட்சுமி என்று சொல்லி விட்டார்கள். அதை நம்புகின்ற மக்கள், அது லட்சுமி என்பதற்காக, மண வீட்டில் மட்டுமல்லாமல், பிணத்தருகிலும் கொளுத்தி வைக்கிறார்கள். சரி, நான் கேட்கிறேன்; இந்த மணமகனுக்கோ, அல்லது மணமகளுக்கோ தெரியுமா, விளக்கு ஏன் வைக்கிறார்கள் என்று?" பெரியாரின் கேள்விக்கு என்ன பதில்!

13-ந் தேதி ஜோலார்பேட்டையில் பெரியார் “ அண்ணாபோலத் தனியான ஒரு கொள்கை ஏற்படுத்தி, அதன் பேரில் தேர்தலுக்கு நின்று, ஆட்சியைப் பிடித்தவர், உலகிலேயே லெனின் ஒருவர்தான், என்று பெரியதொரு வரலாற்றுச் சிகரமான உண்மையை உரைத்தார். அன்றே திருப்பத்தூரில், ஆசிரியர்கள் சங்கத்தில், எனக்கு அதிகாரமிருந்தால் கல்யாணமானவர்களுக்கே ஆசிரியர் வேலை தரமாட்டேன்; அல்லது, கல்யாணமானாலும், பிள்ளை பெற்றால் அவர்களுக்குத் தரமாட்டேன், கடவுளை நம்பாத பகுத்தறிவுவாதிகளுக்கே ஆசிரியர் வேலை தருவேன்; அப்போது தான் இளமையிலேயே பிள்ளைகள் பகுத்தறிவோடு வளர்வார்கள்" என்றார் பெரியார். அடுத்த “பிராமணாள்" போர்டு அழிப்புக் களமாகத் திருச்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. 18 ந் தேதியும் 21-ந் தேதியும் மறியலுக்குத் தேதி குறிப்பிட்டுச் சென்ற போது, தாமே அழித்துவிட்டுப் போராட்டத்தை வெற்றியாக முடிக்க உதவினர் ஓட்டல் உரிமையாளர்கள்.

திருச்சியிலுள்ள கிறிஸ்துவப் பிணங்களைப் புதைக்கும் இடுகாட்டில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனியிடம் இருந்தது. சுவர் எழுப்பியே அதைத் தனிமையாகப் பிரித்திருந்தார்கள். இதை எதிர்த்து 20-6-70 ல் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய பெரியார் - “இது கிறிஸ்துவ மதத்துக்கே இழிவு. உலகில் வேறெங்கும் இப்படிக் கிடையாது. நீக்ரோக்களைக் கொடுமைப்படுத்தும் அமெரிக்காவிலும் இல்லை. இடையிலுள்ள சுவரை நீங்களே உடைத்தெறியுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் இந்துவாகப் போய்விடுவோம் என்று மிரட்டுங்கள்" என்பதாக வழி சொல்லிக் கொடுத்தார் பெரியார். "இப்போது இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றுவதே, தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சிதான். காங்கிரஸ் ஆட்சியைவிட இது எவ்வளவோ நலமான ஆட்சியாகும். தி.மு.க ஆட்சியைக் காப்பதில் நமக்குப் பொறுப்பு அதிகம். ஒரு தாயின் நிலையில் இருந்து நாம் காப்பாற்றவேண்டும். காமாஜரே, நான் இந்த ஆட்சியைக் கவிழ்க்க