பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மாட்டேன் என்பதாக, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் சொல்லியிருக்கிறார். பொறுப்பும், மரியாதையும் உள்ள பத்திரிகைகள் இல்லாததால் தாறுமாறாக ஏதோ எழுதிவருகிறார்கள் என்று 22 ந்தேதி பெரியார் தலையங்கம் எழுதினார். 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு கட்டி நிலச் சீர்திருத்தச் சட்டம் இயற்றித் தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுவிட்டதாக 25-3ந் தேதி செய்தி செய்தி வந்தது.

அனைத்துலக அய்க்கிய நாடுகள் சபையைச் சார்ந்த கல்வி கலாச்சார நிறுவனம் (Unesco) பெரியாருக்கு விருது வழங்கிச் சிறப்புப் பெற்றது. சென்னை இராஜாஜி மண்டபத்தில் 27-6-70 மாலை 5.30 மணிக்கு மத்தியகல்வி அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பெரியாருக்கு இந்த விருதினை வழங்கினார். citation எனப்படும் அறிமுக உரையில் - புது உலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை அர்த்தமற்றசம்பிராதாயம் இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி - என்று பெரியார் அவர்களைப் பாராட்டி அந்த விருதுப் பட்டயத்தில் பொறித்திருந்தார்கள். பெரியார் நன்றியுரையில், "மற்ற புகழ்ச்சிகளுக்கு நான் பாத்திரனல்ல, ஆனால் கடும் எதிரி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இன்னும் என் கருத்துகளை முழுவதும் விரிவாக எடுத்துச் சொல்ல எனக்குப் பத்திரிகை வசதியில்லை. இருப்பதை வைத்துக்கொண்டு இவ்வளவாவது செய்ய முடிகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டில் இந்தக் கருத்துகளைச் சொல்கிறேன், இதுவரை கொலை செய்யப்படாமல் உயிர் வாழ்வதே ஓர் அதிசயமாகும்” என்றார்."

சென்னை பாலர் (கலைவாணர்) அரங்கத்தில் ஒரு புதுமைத் திருமணம் நடைபெற்றது. நரிக்குறவர் சமுதாய மக்களை உயர்த்துவதையே குறிக்கோளாய்க் கொண்டு உழைத்துவரும் ஆசிரியர் ஏ.கே.ரகுபதி (வெள்ளாள வகுப்பு). அந்தச் சமுதாயத்தைச் சார்ந்த பெண்மணி எம்.ஏ. ஞானசுந்தரியை 28-6-70 அன்று கலப்புத் திருமணம் புனைந்து புரட்சி நிகழ்த்தினார். அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய எம்.ஜி.ஆர். அவர்கள் எந்தச் சீர்திருத்தவாதியும் பெறாத பெருவெற்றிகளைப் பெற்றவர் தந்தை பெரியார் அவர்கள். கலப்புத் திருமண விழாக்களில், முதலில் அவரது தியாகத்துக்குத் தலை வணங்குவதே நம் கடமை” என்றார்,

29-ந்தேதி சென்னை அசோகா ஓட்டலில், நலம் நாடுவோர் குழுவின் சார்பில், அய்ரோப்பா செல்லும் முதலமைச்சர் கலைஞரைப் பாராட்டி நடந்த விருந்தும், கூட்டமும்; பெரியாரின் வாழ்த்துகளோடு