பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

543


இணைந்திருந்தது குன்றக்குடி அடிகளார், வீரமணி, என்.டி. சுந்தர வடிவேலு, ஏ.என். சட்டநாதன், ஈ.பி. இராயப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம் வரவேற்றார். " எனக்குச் சூட்டப்படுகின்ற புகழ்மாலைகள் அனைத்தையும் பெரியார் பாலடிகளுக்கே சமர்ப்பிக்கிறேன். நாங்கள் செய்யாத காரியங்களுக்காக எங்களை மன்னிக்க வேண்டும்” என்று உணர்ச்சி பொங்கும் நன்றியுரை நவின்றார் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாதிதி அவர்கள். சீரணி சார்பில் நேரு ஸ்டிேயத்தில் பேசிய டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், "வெளிநாடு செல்லுமுன்பே அங்கெல்லாம் புகழ்பெற்ற முதல்வர் நமது கலைஞர்" என்று பாராட்டினார்.

அய்ரோப்பிய சுற்றுப்பயணத்துக்காக 1-7-70 அன்று புறப்பட்ட கலைஞர், "என்னை அடிமை கொண்ட அன்பு நெஞ்சங்களே! உங்கள் அடிதொழுது விடைபெறுகிறேன்" என்று கூறிச்சென்றார். கல்வியாளர் எஸ்.வி. சிட்டிபாபுவின் மகள் திருமண விசாரிப்புக்காகப் பெரியார், மணியம்மையாருடன் சென்று வந்தார். ஜூலை மாதம் கடும் பயணம் பெரியாருக்கு ! கலைஞரை வழியனுப்பிய பின் 2 சிவகங்கை, 3 பரமக்குடி, 4 தேவகோட்டை, 5 காலை பட்டுக்கோட்டை, மாலை காரைக்குடி, 6 இராமநாதபுரம், 7 அருப்புக்கோட்டை 10 திம்மராய சமுத்திரம், 11 திருச்சி, 12 சீரங்கம் திருவானைக்கோயில், 14 15 16 17 18 சென்னை, 19 கும்பகோணம், 20 லாலாபேட்டை 21 தாளக்குடி ஆலம்பாடி, 22 பச்சாம்பேட்டை , 26 சேலம், இப்படி! இதற்கிடையில் நாவலர் நெடுஞ்செழியனின் 51-வது பிறந்தநாளான 11-7-70 அன்று வீரமணி மூலமாகப் பெரியாரின் வாழ்த்துச்செய்தி தி.மு.க. தலைவர்களில் தலைசிறந்தவர். தி.மு.க. கொள்கைகளை முழுக்க முழுக்க ஆதரித்து நடந்து கொள்பவர் நாவலர்" என்று எடுத்துக் கூறியது. 15-ந்தேதி காமராஜரின் 68-வது பிறந்தநாளன்று, வழக்கத்தை விடாமல், ஒரு சிறிய புகைப்படமும், 4 வரியில் வாழ்த்துச் செய்தியும் "விடுதலை" முதல் பக்கத்தில் இடம் பெற்றன. இந்தியன் பேங்கில் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்து, நிர்வாகம் சீர்கெட்டதாக “விடுதலை" ஆதாரங்களை அள்ளி இறைத்ததால், அரசு, கண்காணிப்புத் தனி அதிகாரிகளை நியமித்தது.

ஈ.வெ.கி. சம்பத்தின் மகள் டாக்டர் நாகம்மாள் - நீதிபதி அழகர் சாமியின் மகன் டாக்டர் வெங்கடேஷ் இருவரின் திருமணம் பெரியார் திடலில் 15-7-70 காலை 10-30 மணிக்குப் பதிவு செய்யப்பட்டபோது, பெரியார், மணியம்மையார், காமராசர், கக்கன், சி. சுப்ரமணியம் ஆகியோர் வந்திருந்தனர். மாலையில் 5-30 முதல் 7-30 மணிவரை நடந்த வரவேற்பு விழாவில், பெரியார்தான் பிரதம வரவேற்பாளர். முதல்வர் கலைஞர் 16-ந்தேதி லண்டன் மாநகரில், "அண்ணா வலியுறுத்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதே