பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தி.மு.க. கொள்கை" என்பதை விளக்கினார். தமிழில் மதராஸ் என்பதற்குப் பதில் சென்னை என்றே வழங்கப்படுவதற்கான அரசாணை 19-ந் தேதி வெளியிடப்பெற்றது.

15-ந் தேதி கோயில்களை இடிக்க நேரலாம்" என்ற தலையங்கம் பெரியாரின் கோபத்தைக் காண்பித்தது. "இருக்கின்ற கோயில்கள் போதாதா? இப்போதும் அரசாங்க நிலங்களில் கோயில்கள் கட்டி வருகிறார்களே! இதை இந்த அரசு அனுமதிக்கலாமா? எங்களுக்கு ஆத்திரம் உண்டாக்கக்கூடிய காரியங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இவைகளைத் தடுத்து நிறுத்தவேண்டியது தி.மு.க அரசின் கடமையாகும். இல்லையானால் இப்படிப்பட்ட கோயில்களை அழிக்கின்ற வேலையைத் துவக்குகின்ற சங்கடம் எங்களுக்கு ஏற்படலாம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்."

16-7-70 அன்று கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்மன்றத் துவக்க விழாவுக்குப் பெரியாரை ஏன் அழைத்தார்களோ? பெரியார் பேச்சின் துவக்கமே இப்படி: “பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் எதற்காக? என்ன அவசியம் உங்களுக்கு? நீங்கள் மொழி ஆராய்ச்சி செய்யவா எஞ்சினீரிங் காலேஜுக்கு வந்தீர்கள்? தமிழில் முதலாவதாக ஒரு மரியாதைச் சொல் உண்டா ? வா, தா, கொடு, இரு என்கிறோம். மேல் ஜாதியாக இருந்தால் வாருங்கள், தாருங்கள், கொடுங்கள், இருங்கள் என்கிறோம். இதிலேயே ஜாதிப் பாகுபாடு இங்கிலீஷில் அரசனாயிருந்தாலும் Come, go, give; ஆண்டியாயிருந்தாலும் அதே வார்த்தைதானே! இதைச் சொல்லி, அறிவியல் மொழியல்ல தமிழ்: காட்டுமிராண்டி மொழி என்று நான் சொன்னால், என்னோடு அதே விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சொல்கிறார்; பழைமையான மொழி என்பதற்காகப் பெரியார் காட்டுமிராண்டி மொழி என்கிறார்; என்று சப்பைக்கட்டு கட்டுகிறார். நானும் சரி, விழாவில் ஏன் தகராறு? என்று விட்டுவிட்டேன். அதே முதல் அமைச்சர் இப்போது பாரீசில் போய் - ஏதோ உலகத் தமிழ் மாநாடாம் அதில் சொல்கிறார்; விண்வெளி வேகத்திற்கு ஏற்பத் தமிழ் வளரவேண்டும் என்று. அப்படியானால் வளரவில்லை என்பதை இவரே ஒத்துக் கொண்டதாகத்தானே அர்த்தம்? நேற்று எங்கள் சம்பத்து வீட்டுத் திருமணத்தில் கூட விளக்கு, பாத பூஜை எல்லாம் நடத்துகிறான். கேட்டால், பிள்ளை வீட்டாருக்காக என்கிறான். என்ன நியாயம்?"

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காஞ்சி மணிமொழியார் தலைமையில், 18-ந்தேதி, நாவலர் பொள் விழா மலரைப் பெரியார் வெளியிட்டு உரையாற்றினார். “நாவலர் நெடுஞ்செழியன் அண்ணாவுக்கு அடுத்த பேச்சாளர். புள்ளி விவரங்களை ஏராளமாக அள்ளி வீசுவார். ஒழுக்கத்தில் குற்றம் கூற முடியாதவர். இவர் நூறாண்டுக்கு மேலும் வாழ்க என்று