பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

545


வாழ்த்துகிறேன், தம்பியும், இவரும் படித்து முடித்தவுடன், வேலைக்குப் போக விரும்பாமல், என்னிடம் வந்து பொதுத் தொண்டு செய்ய விரும்புகிறோம் என்பார்கள். ஆனால் நாவலரிடத்தில் இப்போது எனக்குப் பிடிக்காதது, தமிழைப் பயிற்சி மொழி ஆக்குகின்ற திட்டந்தான். நீங்கள் என்னதான் செய்தாலும் இங்கிலீஷின் இடத்தைத் தமிழால் நிரப்ப முடியுமா? நல்ல வண்ணம் சிந்திக்க வேண்டும். மற்றபடி என்னைப் பொறுத்த வரையில் தி.மு.க. என்பது தி.க.வின் கிளைதாள்" என்று.

அன்புள்ள தந்தை பெரியார் அவர்கட்கு வணக்கம். சுற்றுப் பயணம் தமிழகத்திற்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தங்கள் நலமும் நண்பர்கள் நலமும் அறிய ஆவல், அன்புள்ள மு. கருணாநிதி - 12-7-70-ல் ஆம்ஸ்டர்டாமிலிருந்து எழுதப்பட்ட இந்தக் கடிதம், 21-ந்தேதிதான் சென்னையில் கிடைத்தது. அன்றே பிற்பகல் 2-30 மணிக்கு, அழகிய அய்ரோப்பிய உடையில், சென்னை வந்து இறங்கினார் முதல்வர் கலைஞர்.

“பழைய காங்கிரசும், இராஜாஜியின் சுதந்தராக் கட்சியும் இப்போது ஒன்று சேர்கிறார்கள். இந்திராவை எதிர்ப்பது என்ற போர்வையில், தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவே இவர்கள் மறைமுகமாகக் கூட்டு சேர்ந்துள்ளனர். தன் ஜாதி நலத்துக்காக ஆச்சாரியார் தி.மு.க.வை எதிர்க்கிறார், டில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் காமராஜர் தி.மு.க.வை எதிர்க்கிறார்' என்று பெரியார் அறிவித்த கருத்து -இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டிலும் இடம் பெற்றது. 2-8-70 அன்று தாழ்த்தப்பட்டோர் கலாச்சார மன்றம் பெரியாருக்குப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்தது. அமைச்சர் சத்தியவாணிமுத்து, மேயர் வை. பாலசுந்தரம், நீதிபதி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் - “சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுவரை தாழ்த்தப்பட்டோர் யாரும் நீதிபதியாக நியமிக்கப்படவே இல்லை. கிரமப்படி இரண்டு பேர் இடம்பெற வேண்டும், உடனடியாக ஒருவரையாவது நியமிக்கவேண்டும்” என்று பெரியார் அங்கு விடுத்த கோரிக்கை, தமிழக அரசின் காதில் உடனே விழுந்தது எவ்வளவு பெரிய வியப்பு!

3-ந் தேதி “வேண்டுகோள் எச்சரிக்கை” என்ற தலையங்கத்தில் பெரியார் - “தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் திருப்தியாயில்லை. முக்கியமான காரணம், கழகத்தின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போ, கட்டுப்பாடோ குறைவானதுதான், என்று நான் கவலைப்படுகிறேன். இது எப்படி இருக்கிறதென்றால், பெட்டி கெட்டி; பூட்டு பலமில்லை' என்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. தலைமையான ஆட்சி சரியாயிருந்தும், கீழ்மட்டத்தில் இப்படிப் போகவிடலாமா? உள்ளாட்சி போன்ற இலாக்கா மாற்றமோ, அல்லது மிகுந்த எச்சரிக்கையோ தேவை என்று நினைக்கிறேன். இதைப்பற்றி