பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

547


புகழ்ந்து பாராட்டுகின்றார். இத்தனைக்கும் கலைஞரை மூள்பீப்பாய்க்குள் போட்டு உருட்டுவதுபோல், அவருக்கு ஓயாத சொல்லை கொடுக்கிறார்கள். மின்சார ஊழியர்கள், பால்வள நிறுவன ஊழியர்களின் தொல்லை ஒருபுறம். தனியார் பஸ் முதலாளிகளின் தொல்லை ஒருபுறம்; நிலப்பறி இயக்கம் என்று கம்யூனிஸ்டுகளின் மிரட்டல் ஒருபுறம். இவ்வளவு மலைபோல் வந்த துயரங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கிவிட்டன. அனைத்துச் சாதியாரும் கடவுள் அருகில் போய் மணியாட்டலாம் பூசை செய்யலாம் என்றார்; இப்போது N.G.O. இரகசியக் குறிப்பை ஒழித்தேன் என்கிறார்; இது சரித்திரங் காணாத அதிசயம். கலைஞர் ஆட்சி நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன். ஏன்? காங்கிரஸ் ஆட்சியிலே, என் வீட்டிலே கூடக் காலிகள் அட்டகாசம் செய்ததால், எனக்கே போலீஸ் காவல் தேவைப்பட்டதே." உள்ளக் குமுறலும், பீரிட்டுவந்த உணர்ச்சிப் பிரவாகமும், 21-ந் தேதி “விடுதலை”யில் தலையங்கமாய்ப் பொங்கி வழிந்தன! 1-9-70 பொள்ளாச்சியில் கலைஞர் படத்திறப்பு விழாவில் பெரியார் -இவருக்குப் படம் திறப்பது போதாது, கட்டாயம் உடனே சிலை அமைத்தாக வேண்டும்" என்றார்.

6-9-70 அன்று சென்னையில் முதன்முறையாகப் பகுத்தறிவாளர் கழகம் துவக்கப்பட்டது. சி.டி. நடராசன் தலைமையில், நாவலரும் பெரியாரும் கலந்து கொண்டனர். ஆகஸ்டு மாம் 10-ந் தேதி முதல் 20 வரை ஓய்விலிருந்த பெரியார் செப்டம்பர் முழுவதும் கடும் பயணம் மேற்கொண்டார். 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கோவை மாவட்டச் சுற்றுப் பயணம். பல கூட்டங்களில் பேசினார். கோயிலை நானே இடிப்பேன் என்று ஓர் நாள் கர்ச்சித்தார். “இந்தக் காமராஜர் புத்தி ஏன் இப்படிக் கீழாகப் போய்விட்டது? இவர் ஏன் ஆச்சாரியார் வீடு தேடிப் போகிறார்? தி.மு.க. ஆட்சியை ஒழிக்க, கவிழ்க்க அவருடனா கூட்டு சேருவது? பார்ப்பான் குடுமியை அறுத்தால் 3 மாதம், பூணூலை அறுத்தால் 6 மாத தண்டனை! செய்து பார்த்து விடுவோமே! அடுத்த முறை இதே தி.மு.க. ஆட்சியில் நானே கடப்பாரை எடுத்துக் கோயிலை இடிக்கிறேனா இல்லையா, பாருங்கள்" என்று முழங்கினார் தந்தை பெரியார்.

செப்டம்பர் மாதம் 12, 13 நாட்களில் சென்னை அசோக் நகரில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த தி.மு.க. ஆவன செய்து வந்தது. இதற்கிடையில் 9-9-70 அன்று கலைஞர் அமைச்சரவையில் அமைச்சர்களாயிருந்த கே.ஏ. மதியழகன், மா. முத்துசாமி, கா. வேழவேந்தன் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை . பதவி இழப்பினும், அன்னார் மூவரும் கழகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். இவர்களது பதவி நீக்கம் பற்றி, முதல்வர், தந்தை பெரியாரிடம் முன்பே கலந்ததாகச்