பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

548

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சிவ வட்டாரங்கள் கருத்தறிவித்தன கலைஞர் தலைமையில் அஜய் மூகர்ஜி மாநில சுயாட்சி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். "தலைவரை உருவாக்கிய தலைவர் பெரியார் இப்போது பேசுவார்" என்று 18- ந் தேதி கலைஞர் அறிவித்ததும், பெரியார் பேசினார்: "சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள் கழிந்த பின்பு ஓர் மாநாடு கூட்டி, எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று கேட்கிறோம். இது வெட்கக் கேடான நிலைமை அல்லவா? இந்த மாநாட்டின் கோரிக்கைகள் விரைவில் வழங்கப்படாவிட்டால், இன்னும் மூன்றே ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கு மாநில சுயாட்சி அல்ல; முழுச் சுதந்திரம், விடுதலை, கிடைத்தே தீரும்! அதை யாரும் அப்போது தடுக்க முடியாது” என்றார் பெரியார், நாவலர் நெடுஞ் செழியன் மேல் நாடுகள் சுற்றுப்பயணத்துக்காக 17-9-70 அன்று மாலை புறப்பட்டார். பின்னர் இவர் 28-10-70 இரவு 10 மணிக்குத்தான் சென்னை திரும்பினார்.

இந்த ஆண்டு பெரியார் 95-வது பிறந்த நாள் விழா மதுரைத் திருநகரில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது, 17-9-70 அன்று. பெரியாரும் நேரில் கலந்து கொண்டார். இந்த ஆண்டும் “விடுதலை" மலரில், பெரியாரின் அறிவுக்கு விருந்தான சில கட்டுரைகள் வழக்கம் போல் இடம் பெற்றன. பிறந்த நாள் செய்தி, வேலைத் திட்டம் ஆகியவை தரப்பட்டன:- “என்னுடைய 91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச்சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல், வாழ்நாள் நீண்டால், மேலும் பல முன்னேற்ற கரமான காரியம் செய்யலாம்போல் தோன்றுகிறது. அதாவது கடவுள், மதம், சாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவு வேண்டுமானாலும் மாறுதலடையப், பக்குவமாய், மாறுதலுக்கு இணங்குபவர்களாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவிற்கும் காரணம் ஆகும்.

நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு எந்தவித மாறுதலுக்கும் எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நான் எனது 92- வது ஆண்டுச் செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வரவேண்டும் என்பதேயாகும். இந்த நிலையில் நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராஜர் ஆட்சி ஒரு நாளும் அந்த இடத்திற்கு வராது. மற்றெது வருமென்றால், பாரப்பனர் ஆட்சி - இராஜாஜி ஆதிக்க ஆட்சிதான் - வரும் அதுவோ, வேறு எதுவோ, வந்தாலும்