பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

555


ஆசிரியர்களே! அரசுப் பணியாளர்களே தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால் நீங்கள் தொலைந்தீர்கள். ஆகவே நன்றாகச் சிந்தியுங்கள்!" என்று.

15-12-70 அன்று சுப்ரீம் கோர்ட், நாடாளுமன்றம் நிறைவேற்றிய ராஜமான்ய ரத்துச் சட்டம் செல்லாதென, அரசுக்கு எதிர்ப்பாகத் தீர்ப்பு வழங்கி விட்டதால், நாடாளுமன்றம் கலைக்கப்படுமோ என்ற கேள்வி பிறந்தது. வீரமணியின் சகலையான பேராசிரியர் சா.கு. சம்பந்தம் காலமானார்; ஓட்டேரி இடுகாட்டில் பெரியார் தலைமையில் 16-12-70-ல் இரங்கல் கூட்டம் நிகழ்ந்தது. 18-12-70 அன்று சேலம் ரோசுசெட்டியார் என்றழைக்கப்படும் ரொ.சு. அருணாசலம் மறைவு பெரியாருக்கு ஒரு கை போனது போலாயிற்று. 19-ந் தேதி அவருடைய அடக்கத்துக்குப் பெரியார் சென்றிருந்தார். 30-ந் தேதி நினைவு நாளில் அவர் படத்தையும் பெரியார் திறந்து வைத்தார். 16, 18 தேதிகளில் பெரியார், காமராஜர் - ராஜாஜி உறவு பற்றித் தலையங்கம் தீட்டியிருந்தார். “ஆச்சாரியாரின் ஜாதிப்புத்தியே இப்போது காமராஜரின் புத்தியாகிவிட்டது. காமராஜரும் நானும் ஒன்றுதான் என்று ஆச்சாரியார் சொல்கிறார். ராஜாஜியும் நானும் ஒன்றுதானெனக் காமராஜரும் சொல்லுகின்றனர். இவர்கள் இருவரையுமே தலையெடுக்க வொட்டாமல் தோல்வியுறச் செய்து, தமிழ்மக்கள் ஏமாறவில்லை என்று காட்டவேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் செய்து விடாதீர்கள்' என்பது பெரியார் கருத்து.

“மட்டக் குதிரையையும் எருமையையும் ஒரு வண்டியில் கட்டி ஓட்டினால் எப்படி இருக்கும்? அதுபோலக் காமராஜரும் இராஜாஜியும் சேர்ந்து இழுக்கும் ஜனநாயக வண்டியின் கதி என்னாகும்? வண்டி ஓடுமா? போய்ச் சேருமா?" எனவும் 25-ந் தேதி பெரியார் பெட்டிச் செய்தி தந்தார். அடுத்த நாளும் இன்னொன்று, “கலைஞர் ஆட்சிக்கு அனுகூலமான இந்திரா ஆட்சியும், இந்திராவைக் கட்டுப்படுத்தக் கூடிய வசதியும் வாய்ப்புங் கொண்ட கலைஞர் ஆட்சியும் நமக்கு நல்ல ஆட்சியா? அல்லது இரண்டுக்கும் கேடான, எதிரான, இராஜாஜி - காமராஜர் கூட்டணி ஆட்சியா?" என்பதாக!

27-12-1970 நள்ளிரவுச் செய்தி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

பழனியில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி துவங்கப்படுமென அமைச்சர் கே.வி. சுப்பய்யா அறிவித்தார். தமிழ் இசைச் சங்கம் நடத்தும் இசைவிழா நிகழ்ச்சிகளில் 100க்கு 3 பேராயுள்ள பார்ப்பனர் கள்தான் 100க்கு 99 இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக “விடுதலை” சுட்டிக் காட்டியிருந்தது. தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் - ஏன்? என்று பெரியார் எழுதியு புத்தகம் ஒன்று; தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் - என்று வீரமணி எழுதிய புத்தகம் ஒன்று - ஆக இரண்டும்