பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மயிலையில் ஒரு திருமண விழாவில் வீரமணி பேசிக்கொண்டிருக்கும் போது, விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் வெளியில் கூச்சல் போட்டனராம். தேர்தல் முடிவு தோல்வி என்பதாகத் தெரிந்துபோனதால், கலவரம் காலித்தனத்தில் பார்ப்பனர் இறங்குவார்கள்; ஜாக்கிரதை என்று பெரியார் 1-2-71-ல் எழுதினார். 2-ந் தேதி மயிலையில் பேசும்போது, தாங்கள் ஜெயிக்கும் நம்பிக்கையிருந்தால் காமராசர், கக்கன், சம்பத்து ஆகியோர் பார்லிமெண்டுக்கு நிற்பார்களா? எனக் கேட்டார் பெரியார்.

கற்பு என்ற சொல்லைப் பற்றிப் பெரியார் நிரம்ப ஆராய்ச்சி செய்திருக்கிறார். இது ஆண் பெண் இருபாலருக்கம் பொதுவானது. ஆனால், ஆரியக் கலாசாரத்தின்படி கற்பு என்பதற்குப் பரவிரதத்தன்மை என்று பொருள் கொண்டு, அதைப் பெண்களுக்கு மட்டும் உரித்தாக்கி விட்டார்கள். ஆங்கிலத்தில் Chastity அல்லது Virginity என்பதுகூட இருவர்க்கும் பொதுவானதுதான். ஒரு முறை ஆண் பெண் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டால் இருவருடைய கற்பும் கெட்டதாகத் தானே பொருளாக முடியும்? குழந்தை சுமப்பது ஒன்று தவிர பெண்களுக்கு மட்டுமே சொந்தமென்று சொல்ல என்ன இருக்கிறது? திருவள்ளுவர் கூடப் பெண்களுக்கு மட்டுமே கற்பை வலியுறுத்துகிறார். அதனால் தான் குறள்கூடப் பிற்போக்கான நூல்' - என்று பெரியார் கருதினார். பெண்ணடிமை தீர்ந்து ஆண் பெண் சமத்துவம் ஏற்படக் கற்பு என்ற சொல்லை இருவருக்கும் பொதுவாக ஒழுக்கம் என்ற பொருளில் வைத்துக்கொள்ளலாம் என்றார். பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில் மிக நுட்பமாகவும் திட்பமாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பெரியார் பல விஷயங்களையும் அலசியுள்ளார்.

மார்ச் மாதம் 1, 4, 7 தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறத் திட்டம். அதனால் பிப்ரவரி முழுதும் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாயிருந்தது. தமிழ் நாட்டில் இந்திரா காங்கிரசின் ஒத்துழைப்போடு தி.மு.க. களத்தில் நின்றது. வலது கம்யூனிஸ்டுகள் ஆதரவும் உண்டு. மற்ற அணிகள் ஒன்றாக இணைந்தன. நடிகர் சோ என்னும் பார்ப்பனரும், சிவாஜிகணேசனும் காமராஜர் ராஜாஜி அணியில் பாடுபட்டனர். பெரியார் பிப்ரவரி மாதம், நிறையச் சுற்றுப் பயணம் செல்லாமல், எழுதுவதில் அதிக அக்கறை மேற்கொண்டார். காமராஜர் கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம். திடீர்ப் பிள்ளையார் போச்சு, பாடமொழிப் பிரச்சினை போச்சு, சேலம் வந்தது. சாதனை புரிந்து வரலாறு படைத்த தி.மு.க.வை ஆதரிப்பீர். மாட்டுச் சாணியை மிதிக்கத் தப்பி மனிதச் சாணியை மிதிப்பதா? இந்திரா மீது உள்ள கோபத்தில் இராஜாஜியை ஆதரிப்பதா? இதுவும் போதாதென்று இன்னொரு பார்ப்பனக் கட்சியான ஜனசங்கத்திடம்