பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

569


சென்றால். 'ஆமாமுங்க இரண்டு நாளாய்க் கூட்டம் பேசவில்லை; அதனால் தானுங்க .' என்கிறார். எனக்கு மிகுந்த பொறாமையாக இருக்கிறது" என்றார் கலைஞர்.

“திருச்சியிலுள்ளது போல் கடவுள் மறுப்புக் கல்வெட்டுகள் எல்லா ஊர்களிலும் பதிக்கப்பெறும். இதற்கு யாராவது எதிர்ப்புத் தெரிவித்தால், பிறகு கோயில்களும் இருக்கக் கூடாதென்று நாங்களும் ஆரம்பிப்போம்” என்றார் பெரியார் 8-8-71 அன்று, சென்னை பகுத்தறிவாளர் கழகம், டாக்டர் பட்டம் பெற்ற கலைஞரைப் பாராட்ட, 14-ந் தேதி பெரியார் திடலில் ஒரு விழா நடத்திற்று. பெரியார், கலைஞருக்குப் பொன்னாடை போர்த்தி, அவர கன்னங்களைத் தமது விரல்களால் தடவிக் கொடுத்தார். பெரியார் தலைமையில் குன்றக்குடி அடிகளார், என்.டி. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன், கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். கலைஞருக்குச் சிலை அமைக்க வேண்டுமென்று, பெரியார் பிடிவாதமாகக் கூறி, அங்கேயே குழுவும் அமைக்கப்பட்டது. பெரியார் புரவலர்; அடிகளார் தலைவர்; மேயர் சா. கணேசன், என்.டி. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன் துணைத்தலைவர்கள்; கி. வீரமணி செயலாளர், அவ்விடத்திலேயே 2,755 ரூபாய் நன்கொடையும் வசூலாகி விட்டது. கலைஞரால் மறுக்க முடியவில்லை ; எனினும் தந்திரமாய் ஒரு நிபந்தனை வெளியிட்டார் - அதாவது நாங்கள் முதலில் பெரியாருக்குச் சிலை அமைப்போம். அதன் பிறகு பார்க்கலாம். என்றார். “சும்மா சொன்னாலோ, கேட்டுக் கொண்டாலோகூட நான் மறுத்திருப்பேன். அய்யாவின் கட்டளையை என்னால் மீற முடியாது. பதவி ஏற்ற போது நான் சொன்ன எதையும் மறுக்கவுமில்லை; மாறவுமில்லை. பெரியார் வழிதான் அண்ணா வழி; அதுதான் எங்கள் வழி! முறைகளில் சில வேறுபாடு இருக்கலாம்; ஆனால் முரண்பாடு இருக்க முடியாது! நாலாந்தரத்தாரை நாலாந்தளத்தாராக மாற்றுவோம், என்று சூளுரைத்தபடியே சென்று காட்டுவோம் - அய்யாவின் திருக்கரங்கள் என் கன்னத்திலே பட்டது. என்தாயின் முத்தத்தைவிடச் சிறந்தது. வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து மகிழ்ந்திருப்பேன்" என்றார் கலைஞர். இந்தக் கூட்டத்தில் பெரியார், புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக இது என்றால், ஒரு முட்டாள் தனத்துக்குப் பதிலாக இன்னொரு முட்டாள்தனம் என்றுதானே அர்த்தம்?" என்றார்.

24-ந் தேதி சென்னையில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பெரியார், “இது சாதி அடிப்படையில் இருப்பதால், இந்தச் சங்கம் ஒழியவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து, வேறு தொழில்களில் ஈடுபடுத்துங்கள்" என்றார். பெரியாரின் 93-வது பிறந்த நாள் விழாவையொட்டி