பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

583


சமாளிக்க வேண்டிய கவலைகள். கோடீசுவரன் ஆனாலும் எப்படி ஒரு கோடியைப் காப்பாற்றுவது என்று கவலை; அல்லது அடுத்தவனுக்கு 2 கோடி இருக்கிறதாமே என்று தம்மினும் மேம்பட்டவரைப் பார்த்துக் கவலை; ஏழை தனக்குச் சாப்பாடில்லையே; குச்சு வீட்டில் வாழ்கிறோமே; என்று. கவலைப்படுகிறான். மற்றவன் வசதியாக மச்சு வீட்டில் வாழ்கிறானே என்று மனம் புழுங்குகிறான். சொந்த உடமை இருப்பதால் கவலை நிறைந்த வாழ்வாகிவிடுவதால், பொதுவுடைமை ஏற்பட்டால் கவலையற்ற வாழ்வு பெறலாம் என்பதே தத்துவமாகும். இன்றைக்கு இந்தப்படிக்குப் பொதுவுடைமைக் கொள்கையினை ஏற்றுக்கொண்ட மக்கள் ரஷ்யா, சீனா, அங்கேரி, போலந்து, ஆஸ்ட்ரியா, செக்கோஸ்லாவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் 100 கோடிக்கு மேல் வாழ்கிறார்கள். இந்த நாடுகளில் கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ, முன்னோர்கள் நடப்போ ஒன்றும் கிடையாது; அறிவுதான் பிரதானம்.

நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளுக்கு, வயிற்றுப் பிழைப்புச் சாதனமே தவிர, பொது மக்கள் கடைத்தேறப் பொதுவுடைமைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில்லை. மோட்சம், முக்தி என்ற வார்த்தைக்குத் துக்கநாசம், சுகப் பிராப்தி என்பது பொருள். இந்தக் துக்க நிவர்த்திக்கும் குறைபாடுகள் ஒழிப்பிற்கும் பரிகாரம் பொதுவுடைமைதான். ஆசையினால் ஏற்படும் குறைபாடும், தேவையினால் ஏற்படும் குறைபாடும் பொதுவுடைமையால் ஒழிந்துவிடும்.

ரஷ்யாவில், கணவன் மனைவியாக வாழ்கின்றவர்களுக்கு வசிக்க அறை கொடுக்கின்றார்கள். மற்ற வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். இருவரும் இஷ்டப்பட்டுச் சேர்ந்து வாழ்கின்றனர். இஷ்டமில்லாதபோது பிரிந்து கொள்கின்றனர். ஏதாவது விவகாரம் என்றால், குழந்தைகள் யாரிடமிருப்பது என்பதாக வந்தால், அதற்கென்று தனிக் கோர்ட்டுகளில் தீர்த்துக் கொள்வார்கள். ஒருவன் மனைவியை இன்னொருவன் அனுபவித்தான் என்ற பேச்சே அங்கு வராது; அனுபவிக்கப் பலாத்காரம் பண்ணினான் என்றால் தான் கேஸ் அங்கு பிள்ளைகளை அரசாங்கமே வளர்த்துக் கொள்கின்றது. இங்குதான் கொள்ளிபோட, சொத்துக்கு வாரிசாகப், பிள்ளை வேண்டும் என்கிறோம்.

அங்கு, கீழ்மேல் என்று உத்தியோகத்தில் வித்தியாசம் இல்லை. ஒரே சம்பளம், சமமான அந்தஸ்து. வேலைதான் வேறு வேறாக இருக்கும். உடலில் வலுவிழந்த வயோதிகர்களை அரசாங்கமே காப்பாற்றுகிறது. அங்கு புரட்டோ திருட்டோ கிடையாது. அங்கு கழிப்பிணித்தனம் அவமானமாகக் கருதப்படும். நாணயம் என்பது