பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

584

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மக்களிடம் கரைபுரண்டு ஓடும். மக்களுக்கு எந்தவிதமான கவலைகளோ, குறைபாடுகளோ, கிடையாது. அதனால்தான் அங்கு. 100 வயது 120 வயது வரை பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரோடு வாழ்கிறார்கள்,

அங்கு 1915-ல் புரட்சி ஏற்பட்டது. 1920-ல் சோவியத் ஆட்சி என்று பிரகடனம் செய்தார்கள். இந்தக் காலத்துக்குள்ளாக எவ்வளவு மேம்பாடு அடைந்து விட்டார்கள். எனவே எனக்குத் தோன்றிய பொதுவுடைமை சுருக்கமாய்ச் சொன்னேன்!"

20-ந் தேதி சென்னையில் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம், கா. திரவியம் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் கா. ராஜாராம், எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் பேசியபின் பெரியார், “எதிரிகளை வென்று விடலாம், இனத் துரோகிகளை அடையாளம் காண்பது சிரமம். பகுத்தறிவுவாதி போல வேஷம் போடுவோரிடம் தான் நாம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்கவேண்டும்" என்று உஷார்படுத்தினார். 23-ந் தேதி கடலூரில் இல்லாத கடவுளை இருப்பதாகக் கூறும் மடமையை ஒழிக்க வேண்டும் என்கிறோம் நாங்கள். இதிலென்ன தவறு?" என்று பெரியார் கேட்டார்.

“தமிழரசு” இதழின் சிறப்பு மலர் ஒன்றில் பெரியார் கட்டுரை யொன்று வழங்கியிருந்தார். அதன் முடிவுரையாக, சாதி ஒழிப்பு போன்ற பணிகளுக்கு மத்திய அரசு தடையாக இருந்து வருவதால், தமிழ் நாடு தனியாகப் பிரிந்தால்தான் வழி பிறக்கும் என்ற எண்ணம் ஏன் உண்டாகக் கூடாது என்று கேட்டிருந்தார். அரசு இதழில் பிரிவினைவாடை வீசுவதாகச் சட்டமன்றம் வரையில் சிலர் பிரச்னை உருவாக்கினர். 22, 24 ஜனவரி 72 "விடுதலை" இதற்கான விளக்கங்களை நல்ல வண்ண ம் தீட்டிக் காட்டிற்று. "26-1-1950 Hindu ஏட்டில், பெரியார், ஏன் தனித் திராவிட நாடு வேண்டும் என்பது பற்றி விளக்கிக் கட்டுரை எழுதியிருந்தார். அதனால் "இந்து" வின்கொள்கை திராவிட நாடு பிரிவினை என்றாகி விடுமா?" என்று கேட்டது “விடுதலை."

25-ந் தேதி பகல் 11.30 மணியளவில் சென்னை தேவி குரூப் தியேட்டர்களின் உரிமையாளர்கள் வேண்டியவாறு, பெரியாரும் மணியம்மையாரும் அங்கு சென்று, சுற்றிப் பார்த்து, வியந்து, மேல் நாட்டை ஒப்ப நம் நாட்டுத் தமிழர் ஒருவர் இதனை அமைத் துள்ளதற்காகப் பாராட்டுகிறேன்" என்று வருகையாளர் பதிவேட்டில் எழுதினார் பெரியார். 27-ந் தேதி மயிலாப்பூர், “சாதி ஒழிந்த சமுதாயம் அமைக்கின்றாயா? அல்லது எங்களைப் பிரித்து விட்டு விடுகின்றாயா? என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் விடவேண்டும்” எனப் பெரியார் முழங்கினார். அடுத்த இரண்டாம் நாள் வேலாயுதம்பாளையத்தில், “மாநில சுயாட்சி கேட்டு மத்திய அரசைக் கெஞ்சுவது எப்படியிருக்கிற