பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

586

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


உடனிருக்கும் புலவர் கோ. இமயவரம்பன் அறிவித்தார். 17 - ந்தேதியன்று, மணியம்மையார் உடனிருந்து கவனிப்பதாகவும், மருத்துவமனையில் மன்னை நாராயணசாமி, தஞ்சை பெத்தண்ணன், நடராசன் எம்.எல்.ஏ., திருவையாறு இளங்கோவன் எம்.எல். ஏ. போன்ற தி.மு.க. தோழர்களும், கா. மா. குப்புசாமி போன்ற தி.க. தோழர்களும் பார்த்ததாகவும், வீரமணி தகவல் தந்தார். அத்துடன், பெரியாருக்குத் தங்கள் வீடுகளில் விருந்தளிக்கும் பழக்கத்தை இனியாவது தோழர்கள் கைவிடுங்கள், என்று வீரமணி வேண்டினார். 18-ந் தேதி கலைஞர் தொலைபேசி மூலம் விசாரித்தார். என். வி. நடராசன் மணியம்மையாரிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டார். அன்பில் தர்மலிங்கம் நேரில் வந்து விசாரித்தார். கலெக்டர் அந்தோணி, பெரியாரைச் சந்தித்துத், தஞ்சை மாவட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், பெரியாரின் பிரச்சாரம் உதவியதாகவும் கூறி; நலம் விசாரித்தார். 19-ந் தேதியன்று ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு ஆகியோர் வந்து பார்த்தனர். அன்று மாலை 4-30 மணிக்குப் பெரியார் திருச்சி போய்ச் சேர்ந்தார். அங்கு 20-ந்தேதி பேராசிரியர் அன்பழகனும், 21-ந் தேதி காமராஜரும் பெரியாரைக் கண்டனர்.

22-2-72 அன்று பெரியார் சென்னை வந்து சேர்ந்தார். பெரியார் திடலில், அன்றைக்குப் பெரியாரை, இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம், அவரது தளபதி, அமிர்தலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், மணவைத் தம்பி ஆகியோர் சந்தித்து உரையாடினர். அமைச்சர் ராஜாராமும், துணைவேந்தர் சுந்தர வடிவேலுவும் உடனிருந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் தமது அனுதாபமும் ஆதரவும் எப்போதும் உண்டு என்றார் பெரியார். மறுநாள் 23-ந் தேதி சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பாராட்டு விழா; பெரியார் தலைமையில், அமைச்சர்கள் மாதவன், அன்பில் தர்மலிங்கம், வீரமணி, கா.து. நடராசன், நெ.து. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன் ஆகியோர் பாராட்டுரை பகர்ந்தனர். "சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர், அந்தக் காலத்தில் M.A. பட்டம் பெறுவதென்பது சாமான்யமல்ல, இவர் தம்பியும் எம்.ஏ. பட்டதாரி; படித்து முடித்ததும் இவர் நேரே என்னிடம்தான் வந்தார். எனக்குச் சோறு போதும்; தங்களுடன் பொதுத்தொண்டு செய்கிறேன் என்றார். இவர் சந்து பொந்து இல்லாத பகுத்தறிவாளர்! என்னைப் போல இவரும், தன் வரையில் சிக்கனமானவர்!" என்று பெரியார் நாவலரைப் புகழ்ந்தார்.

1-3-72 அன்று தமிழ் நாடு அரசு சமர்ப்பித்த பட்ஜெட் 2-49 கோடி ரூபாய் உபரி. பெரியார் இதனை வெகுவாகப் பாராட்டினார். “மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதால்தான் உபரி பட்ஜெட் தர