பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

591


சிற்றாசு. காரைக்குடி ஆர். சுப்பிரமணியம் குழுவினரின் தீ பரவட்டும் நாடகம் நடைபெற்றது. பெரியார் நேரடி மேற்பார்வையில் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்றன. இடையில் பெய்த மழையின் பாதிப்புகள் சமாளிக்கப்பட்டன. புத்தகக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, பாட்டரங்கம், படத்திறப்பு விழாக்கள் எல்லாம் நடைபெற்றன. பக்குவமடையவும், மான உணர்ச்சி பெறவும், கோயில்களுக்குச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளவும், செயலில் இறங்கிடச் சிந்தனை செய்யவும் இந்த மாநாடு பயன்படும் என்றார் பெரியார். அன்பில் தர்மலிங்கம் கண்காட்சி இருந்தார், “இந்தக் கண்காட்சி ஆபாசம் என்றால் கோயில்களில், தேர்களில் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள், புராணச் சித்திரிப்புகள் ஆபாசமல்லவா?” என்று கேட்டார் கலைஞர்.

தாமலில் ஒரு திருமணத்தில் பெரியார், “திருமணம் என்ற சொல் இந்தி எதிர்ப்புக் காலத்தில்தான் வழக்கத்திற்கு வந்தது. வாழ்க்கை ஒப்பந்தம் என்ற சொல்லை சுயமரியாதைக்காரர்களாகிய நாம் உருவாக்கினோம். ஏன் இதற்குரிய சரியான தமிழ்ச் சொல் இல்லை? கூடி வாழும் இந்த வாழ்க்கைக்கு என்னதான் பெயர்? தொல்காப்பியனே கூட “மேலோர் மூவர்க்கும் புணர்த்த காரணங்கள் கீழோர்க்காக்கிய காலமும் உண்டே" என்கிறான், எனச் சரியான அய்ய வினா ஒன்றை எழுப்பினார். 15-5-72 மயிலை கற்பகாம்பாள் திருமணமண்டபத்தில், நாகரசம்பட்டி ராஜாசுப்ரமணியம் பேரனும் விசுவநாதன் மகனுமான சம்பத்குமார் எம்.எஸ்சி., மாயூரம் வேணுகோபால் மகள் வனிதாமணி எம்.எஸ்சி. இருவரின் கலப்புத் திருமண விழா, பெரியார் தலைமையில் நடைபெற்றது. வழுவூர் ராமய்யா பிள்ளை , நெ.து. சுந்தரவடிவேலு, தொகரப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.

இந்த முறை 20 கல்லூரி மாணவர்களுக்கு, சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள், தர்மபுரி மாவட்டம் தாதப்பட்டியில், கிருஷிபண்டிட் பட்டம் பெற்ற கோவிந்தசாமி - துரைசாமி சகோதரர்களின் சாந்தி நிகேதன் போன்ற குளுமையான மாந்தோப்பினிடையே, நாகரசம்பட்டி என்.வி. சுந்தரம், என்.வி. விசாலாட்சி அம்மையார் நேரடி மேற்பார்வையில் வெகு சிறப்புடன் நடை பெற்றன. 3-5-72-ல் துவங்கி கொண்டல் மகாதேவன் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சித் துறை இயக்குநராக 11-ந் தேதி பொறுப்பேற்றார். ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். பொதுப்பணித்துறை செயலாளராக 25-ந் தேதி நியமனம் பெற்றார். 21-5-72 அன்று சென்னை வந்த பிரதமர் இந்திராகாந்தியிடம், முதல்வர் கலைஞர், போர் நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கினார். 3-6-72 அன்று கலைஞரின் 49-வது பிறந்த நாளன்று. பெரியார் எழுதித்தந்திருந்த பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வீரமணி நேரில் படித்தளித்தார்,