பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

592

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காலை 8-30 மணிக்கெல்லாம்.

கோயில்கள் ஏற்பட்டது ஏன் என்ற தொடர் கட்டுரை "விடுதலை"யில் ஆசிரியர் வீரமணியால் எழுதப்பட்டு வந்தது. கடவுளான் ஆபாசக் கதைகளும் பெட்டிச் செய்தியாகப் பிரசுரமாகி வந்தன. ஜூன் மாதம், மற்ற முந்திய மாதங்களைவிட அதிகமாகப் பெரியார் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 11-6-72 அன்று கூடிய சென்னை மாவட்ட திராவிடர் கழகம், அடுத்த 16-6-72 முதல் மயிலை கபாலி கோயில் முன் பகிஷ்காரக் கிளர்ச்சி துவக்குவதாக முடிவெடுத்து, முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிற்று. 14-ந் தேதி கோவையில் கூட்டத்தில் பேச்சைத் துவக்கிய பெரியார், "பரிதாபத்திற்குரிய சகோதரர்களே! உணர்ச்சியற்ற தாய்மார்களே! இனி இப்படித்தான் உங்களை அழைக்கப் போகிறேன்!" (என்று துவக்கினார்)

15-6-72 அன்று பெரியாரிடமிருந்து Trunk Call - ல் வந்த செய்தி, "விடுதலை"யில் கட்டம் கட்டிப் பிரசுரிக்கப்பட்டது. “நமது கிளர்ச்சிக்கு அரசு தடை விதித்திருப்பதை இன்று அறிந்தேன். நம்முடைய கிளர்ச்சி பலாத்காரம் சிறிதுமில்லாத வேண்டுகோள் முறைதான். இதைத் தடை செய்திருக்க நியாயமேயில்லை. இனி நமக்கு மானத்தோடு வாழ வாய்ப்பில்லை. தடையை மதிப்பதும், தடைக்கு ஆளாவதும் மானக் கேடு என்றுதான் கருதுகிறேன். என்றாலும், நம்மாலான வரையில் இந்த ஆட்சிக்குச் சங்கடமும் அதிருப்தியும் ஏற்படாதவாறு நடந்து கொள்ளக் கருதி, நீதியாய் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்துச், சிறிது நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன்!" - கபாலி கோயில் கிளர்ச்சி இவ்வாறாயிற்று!

சென்னை பகுத்தறிவுக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடவுளார் ஆபாசப் படங்கள் சிலவற்றை “Illustrated Weekly” 18-6-72 இதழ் வெளியிட்டது. "துக்ளக்" இதழிலும் சில படங்கள் வெளியாயின. சேலம் எஸ்.சி. ஜெயராம ரெட்டியார் என்ற தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கு, 24-1-71 முதல் சேலம் மாவட்ட ஜுடீஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்று, 22-6-72 அன்று சேதுமாதவன் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது. பெரியார், டி.வி, சொக்கப்பா, திருவாரூர் தங்கராசு, புலவர் பச்சைமுத்து, ஆர். நடேசன் ஆகியோர் மீது 294, 298, 504 பிரிவுகளின்படிக் குற்றம் இழைக்கப்படவில்லை என, விடுதலை செய்த தீர்ப்பு! பெரியாருக்குப் பதில் வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஆஜரானார். மற்றும் விசுவநாதன், நடராசன், ஏ, துரைசாமி , ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினர்.

முதல்வர் கலைஞர் மீது, ஏதோ சி.பி.அய், வழக்குத் தொடரப்பட்டதாகச் செய்தியை அவதூறாக வெளியிட்டமைக்காகத் தமிழர் பேரணி என்னும் அமைப்பினைச் சார்ந்தவர்கள், 23-ந் தேதி