பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

593


“ஆனந்த விகடன்”, 24-ந் தேதி "கல்கி" இதழ்களின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தந்த இதழ்களுக்கும் தீ இட்டனர். பிரிவினை தவிர வேறு வழியுண்டா? என்று வந்த பெட்டிச் செய்தி “விடுதலை”யில் - "தனித் தமிழர் ஆட்சி நடைபெறுவதைப் பொறுக்காமல் Hindu டெல்லி அரசுக்கு மூன்று யோசனைகளைத் தெரிவிக்கும் தைரியத்துடன் முன் வருகிறது.

1. அகில இந்திய சர்வீஸ்களில் 50 சதவீதம் வெளி மாநிலத்தார்க்குத் தரப்பட வேண்டும்.

2. பல சர்வீஸ்களை அகில இந்திய அடிப்படையில் மாற்ற வேண்டும்.

3. அய்க்கோர்ட் ஜட்ஜ்களில் மூன்றிலொரு பங்கு வெளி மாநிலத்தாராயிருக்க வேண்டும்.

இதற்குப் பதில் என்ன சொல்கிறீர்கள்? தமிழ்நாடு தனி நாடானால் தவிரத், தமிழனுக்கு வேறு கதி மோட்சம் உண்டா ?"

விவசாயிகள் கிளர்ச்சி 16-7-72 அன்று நடைபெறும் என்கிற முயற்சி, ஆட்சிக் கவிழ்ப்புக்காகவே செய்யப்படுகிறது. இதிலும் புதுக் காங்கிரஸ் போக்கு சரியில்லை. எனவே நாடெங்கும் 8-7-72 அன்று இதற்குக் கண்டனக் கூட்டங்கள் நடத்துவது, என ஆளுங்கட்சியின் தோழமையிலுள்ள கட்சிகள் முடிவெடுத்தன. “இந்திரா அம்மையாரின் பணந்தான் வருகிறது, தமிழ் நாட்டில் இந்த மாதிரிக் கிளர்ச்சிகள் நடத்த இந்தப் பிரதமர் அம்மா யோக்கியதை, நகர்வாலா ஊழலில் தெரியவில்லையா?" என்று பெரியார் 12-ந் தேதி திருவாரூரில் அம்பலப்படுத்தினார். 12-7-72 முதல் ஆர். தில்லைநாயகம் நெடுஞ்சாலைத் துறையின் பிரதமப் பொறியாளரானார். 31-7-72 முதல் வே. தில்லைநாயகம், நூலகத் துறை தனியாக்கப்பட்டதில், அதன் இயக்குநரானார். நெ.து. சுந்தரவடிவேலு இரண்டாம் முறையாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானதில் பெரியாரின் பரிவு மிகுதி!

“ அரசியல் வாழ்வு, நாளுக்குநாள் மனிதப்பண்பையே கெடுத்தது. நமது பின் சந்ததிகளையே பாதிக்கின்ற அளவு, கீழ்த் தரத்துக்குப் போய்விட்டது. அரசியல் போட்டியாளர்களின் காரணமாக இன்றையச் சமுதாயம், சட்டம் அமைதி ஒழுங்குத் தன்மைகளை அலட்சியமாய்க் கருதும் அகம்பாவம் ஏற்படுத்திக் கொண்டது. ஜனநாயகம் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

நமது நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கும் வரை மனுதர்ம சாஸ்திரம் இருக்கும்வரை, இத்தகைய வன்முறை பலாத்காரம் காலித்தனம் இருக்கத்தான் செய்யும். இதைப் பொதுமக்கள் செயலாக ஆக்கியவர் காந்தியார்தான். இந்த நிலைமை வளர்ச்சிக்கு உற்சாகம்