பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

635



16, 17 தேதிகளில் கூடிய தி.மு.க பொதுக்குழுவில், தலைவர்கள் பதவிவிலகும் யோசனை திரும்பப் பெறப்பட்டது. துணைச் செயலாளர்கள் 7 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளிலிருப்போர் எம். எல், ஏ, எம்.எல்.சி. ஆக இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பதவி நீங்கியோர்க்குப் பதிலாகப் பொறுப்பாளர்கள், 26ந் தேதி நியமிக்கப்பட்டனர்.

எம். ஜி.ஆர் கட்சியில் பச்சைப் பார்ப்பனரான, கே. எம். சுப்ரமணியம், டாக்டர் ஹண்டே போன்றார் சேர்ந்ததை எண்ணி, அ.தி.மு.க என்பது அக்ரகார தி.மு.க. வா? என “விடுதலை” கேட்டது . 23.ந் தேதி!.

பெரியார் சுற்றுப் பயணத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கழகத் தோழர்கள், ஆங்காங்கு கார் நிதி வசூலித்துப் பெரியாரிடம் தந்து வந்தனர். ஜூன் 6 சீர்காழியில் ரூ.1,000; நாகை வட்டம் முதல் தவணை ரூ.1,028 , 2வது தவணை 11.7.73 அன்று ரூ.1, 231; 16ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகம், கோவிந்தராசலு மூலமாக ரூ.1000; 19 பட்டுக் கோட்டையில் ரூ.1,412; 20 ஒரத்தநாடு வட்டம் ரூ.1,415; 21 குடந்தை வட்டம் ரூ.3, 800; 22 காரைக்கால் ரூ.1,117; 23 திருத்துறைப் பூண்டியில் ரூ.1, 1500; 24 காரைக்குடியில் ரூ.1,000; 27 தேவக் கோட்டையில் ரூ.1,002; 30 இடைப்பாடியில், ரூ.1,000; திருச்செங்கோட்டில் ரூ.1,500; அடுத்து ஜூலை மாதம் 1ந் தேதி கரூரில் ரூ5,601; 8 மேட்டூரில் ரூ.3,000; 11 திருவாரூரில் ரூ.2, 275; 22 திருச்சியில் ரூ.2,000, குளித்தலையில் ரூ. 367, பாடாலூரில் ரூ.715; 25 மதுரையில் மேயர் முத்து ரூ.300; 29 மண்ணச்சநல்லூரில் ரூ 1, 310 27; 6.8.72 புதுச்சேரி வட்டம் ரூ.1, 425 50; 13.8.73 லால்குடி வட்ட ம் ரூ5,0000.

பெரியார் பட்டுகோட்டையில் 19.6.73 அன்று பேசுகையில், “செப்டம்பர் முதல் தேதியிலிருந்து மீண்டும் கள்ளுக்கடைகளை மூடுவது புத்திசாலித்தனமல்ல. மிகவும் முன்யோசனையற்ற காரியமாகும் இது. சினிமாவுக்குப் போகின்ற அயோக்கியத்தனத்தை விடவா, கள்குடிப்பது தீமை?" என்று ஆவேசத்துடன் கேட்டார். 24 ந் தேதி காரைக்குடியில் பெரியார் சிலை அமைப்புக் குழு கூடி, அப்போதே 10, 000 ரூபாய் திரட்டியது. 30.6.73 அன்று டாக்டர் கே. ராமச்சந்திரா பொது மருத்துவமனை சூபரிண்டெண்டெண்டாகவும், டாக்டர் எம். நாராயணன் மருத்துவக்கல்வி இயக்குநராகவும், நியமிக்கப் பெற்றனர். 1.7.73 அன்று மாடி ரோடு (Fly Over) எனப்படும் அண்ணா மேம்பாலம், சென்னை ஜெமினிமுனையில் திறக்கப்பட்டது. விழாவில் பிரதமப் பொறியாளர் சி.வி, பத்மநாபன் விவர அறிக்கை படித்தார். முதல்வர் கலைஞர், அமைச்சர்களான நாவலர், சாதிக் பாஷா பங்கேற்றனர். 2ந் தேதி தமிழக அமைச்சர்களின் இலாகாக்களில் சில