பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

638

பகுத்தறிவு பகலவன் தந்தை



உலகில் மற்ற நாட்டுக்காரன் எல்லாம் எப்படி எப்படி முன்னேறி வருகிறான் வெள்ளைக்காரன் என்ன நம்மை விடப் புத்தி சாலியா? இயற்கையாகவே அவன் நம்மை விட அறிவில் குறைந்தவன் தானே! அவன் குளிர்தேசத்துக்காரன்; நாமோ உஷ்ண தேசத்துக்காரர். பாம்பில் கூட உஷ்ண தேசத்துப் பாம்புக்குத்தானே விஷம் அதிகம்! பூவில் கூட உஷ்ண தேசத்துப் பூவுக்குத்தானே மணமும் மதிப்பும் அதிகம்! ஆகவே நாமும் அறிவைப் பயன்படுத்தினால் அவனை விட வேகமாக முன்னேற்றமடையலாம்.

நான் 1932 ல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை யாரென்று விசாரித்தேன். தாங்கள் Proposed Husband and wife என்றார்கள்; தாங்கள் உண்மையான கணவன் மனைவி ஆவதற்காக, எட்டு மாதமாக இப்படி ஒன்றாகத் தங்கியிருந்து பயிற்சி பெறுவதாக கூறினார்கள்! எப்படியிருக்கிறது பாருங்கள்! அந்த மாதிரி நாடு முன்னேறுமா? சும்மா பதிவிரதப் பேசிப் பெண்களை அடிமையாக வைத்திருக்கும் நமது நாடு முன்னேறுமா? பதில் கூறுங்கள்!"

கரியாப்பட்டினத்தில் ஜூலை 11ம் நாள் பெரியார், “தி.மு.க.வை ஒழிக்க முயன்று தோற்றவர்களின் கையாள்தான் எம்.ஜி.ஆர். இவர் மக்களிடம் எதைச் சொன்னால் சுலபமாக ஏமாறுவார்களோ அதைச் சொல்கிறார்" என்றார். 24.7.73 காலை பெரியார், மணியம்மையார் துணையுடன் பொது மருத்துவமனை சென்று, தமக்கு அசதியும் சோர்வும் ஏப்பமும் இருப்பதாக டாக்டர் கே. ராமசந்திராவிடம் கூறி, ஆலோசனை பெற்றுக் கொண்டார். 19.8.73 அன்று தஞ்சையில் வைத்துப் பெரியாருக்குப் புது வேன் வழங்கப்படும் என்றும், கார் நிதிக்கு அதிக நன்கொடை அளித்த மாவட்டம் அதுதான் என்றும் - 1.8.73 "விடுதலை" பறையறைந்தது! தனிப்பட்டவர்களும் மனமுவந்து கார் நிதிக்கு நிறைய வழங்கியிருந்தனர். இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி வெளியிடப்படும் அழகிய சிறு நூல் “உயர் எண்ணங்கள்” 15 காசு விலை என்றது, செய்தி ஒன்று!

8.8.73 அன்று சட்ட மன்றத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி:அமைச்சரவையின் மீது கொணரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசும்போது டாக்டர் ஹண்டே, "சுயமரியாதையிருந்தால், முதல் அமைச்சர் பதவியிலுள்ள கலைஞருக்குச் சுயமரியாதையிருந்தால், அவர் தமது பதவியை ராஜினாமாச் செய்யட்டும்; சுயமரியாதை இருந்தால்...” என்று சொல்லிக் கொண்டே போனார். முதல்வர் கலைஞர் குறுக்கிட்டுப் பேசினார்:- “சுயமரியாதை" எங்கள் சொத்து. நாங்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். முழுக்க முழுக்கச் சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள். இவர் இப்போது சென்றிருக்கும் கட்சியில் கூட, டாக்டர் ஹண்டேதான்