பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

642

பகுத்தறிவு பகலவன் தந்தை



இன்றைய உழைப்பாளிகள் அனைவரும் கீழ் சாதியாகவும், சுக போகிகள் அனைவரும் மேல் சாதியாகவும் இருக்கிறார்கள். ஏதோ ஒரு புரட்சி மூலமோ, சர்வாதிகாரி ஏற்பட்டோ , நாட்டிலுள்ள பொருட்கள், அனைத்தும் மக்களுக்கும் பங்கிட்டுத் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பிரகடனத்தால் பொருளாதார சமத்துவம் ஏற்படுமே ஒழிய, அதுவும் தற்கால சாத்தியாய் இருக்குமே சமூக சமுதாய சமதர்மம் ஏற்பட வழியில்லாததால் அது தனது காரியத்தை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மத்திலும் செய்து கொண்டே இருந்து, பழைய சீர்கேடே ஏற்பட்டுவிடும்.

பார்ப்பனரல்லாத சமூகத்தில் கீழ்சாதிக்காரர்கள் எவ்வளவு செல்வம் தேடி, கோடீஸ்வரரானாலும் அந்தஸ்தில் கீழ்தான் பார்ப்பனர் எவ்வளவு பாப்பரானாலும், சோம்பேறியாய் உழைக்காதவராய் இருந்தாலும், மனித சமூகத்தில் மேல் நிலைதான்! இதனால்தான் பார்ப்பனர் பொருளாதார சமதர்மத்தை எதிர்ப்பதுமாக இருக்கிறார்கள்!

இந்த நாட்டில் சாதி ஒரு கடுகளவு மீதியிருந்தாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் ஒரு விநாடியில் கவிழ்ந்து போகும். மேல் நாட்டைப் படித்துவிட்டுப் புத்தகப் பூச்சியாயிராமல், இந்த நாட்டின் நிலையுணர்ந்து அதற்கேற்றபடி, நடக்க வேண்டும்.

சாதியை ஒழிக்கும் முயற்சியால் ஈடுபட்டு, சாதிமுறையின் ஆணி வேராக இருக்கும் பார்ப்பனனை ஒழிக்கும் முயற்சியே சமதர்ம வாதிகளின் முதற் கடமை என்பது நமது அபிப்பிராயமாகும்."

“மாலை முரசு" ஏடு பெரியாரைப் பேட்டி கண்டு 16.9.73 அன்று விவரத்தை வெளியிட்டது. கேள்விகளும் பதில்களும் மிக்க ரசிக்கத்தக்கவையாக இருந்தன.

கேள்வி: உங்களுடைய அரசியல் வாரிசு யார்?

பதில் : எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது . என்னுடைய கொள்கைகளும் கருத்துகளும்தான் வாரிசு; வாரிசு என்பது தானாகவே ஏற்பட வேண்டும்.

கேள்வி: உங்களுடைய கொள்கைகள், கருத்துக்கள், எண்ணங்கள், கோட்பாடுகள் இவைகளைப் பரப்ப ஊர்தோறும் பகுத்தறிவுப் பிரச்சார நிலையங்கள் அமைக்கப் போகிறீர்களா?

பதில் : இதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் என்னென்னவோ செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் போராட்டம் தான் முக்கியமாகத் தெரிகிறது.

கேள்வி: முன்பு ஒரு முறை திருச்சியில் நடந்த சிலை திறப்பு விழாவில் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னீர்களே! அப்படியானால் தமிழர்கள் காட்டு மிராண்டிகளா?