பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

645


தான் கட்டியிருந்தார். ஆனால் வியர்வை துடைக்கத் தோளில் ஒரு சிறு குட்டை போட்டிருந்தார். அதையும் எடுக்கச் சொன்னார்கள் அங்கிருந்த சாதி வெறியர்; மேளக்காரன் மேல்துண்டு போடலாமா என்றனர்! என்னோடு வந்திருந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமிக்கு விடாதே ஒரு கை பார் என்று ஜாடை காட்டினேன், "சிவகொழுத்து துண்டை எடுக்காதே" என்றார் அழகிரி. தானே அவரது வியர்வையைத் துடைத்து விட்டதோடு, வழிநெடுகிலும் விசிறிக் கொண்டே வந்தார். ஜாதி வெறியர் இருந்த இடம் தெரியாமல் அடங்கிப்போனார்கள் என்றார் பெரியார்.

இந்த ஆண்டு "விடுதலை" பெரியார் 95 - வது பிறந்த நாள் மலரின் விலை 3 ரூபாய், பிறந்தநாள் நினைவாக அலுவலக ஊழியர்களுக்கு, ஆளுக்கு 25 ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டது. காலையில் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமசந்திரன் பெரியாரைச் சந்தித்து மாலை சூட்டி 5,000 ரூபாய் அன்பளிப்பு வழங்கித், தான் பெரியாருக்குச் சென்னையில் ஒரு சிலை அமைத்திட, அனுமதி கோரினார். அவருடன் மதியழகன், மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம். மா. முத்துசாமி. பி.டி. சரஸ்வதி ஆகியோரும் வந்திருக்கின்றனர். 1977 செப்டம்பர் 17 ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகி, இதனை நிறைவேற்றிவிட்டார்.

“செயலும் சிந்தனையும் இணைந்த ஒரே உலகத் தலைவர் பெரியார்தான். தந்தை பெரியார் உலக அரங்கிலே நிறுத்தப்பட்டு அதனால் தமிழகம் புகழடையும் காலம் ஒன்று வரும்.” இவை அமைச்சர் ராமச்சந்திரனின் புகழ் மொழிகள்.

பெரியாருக்கு இனநலம் இதயம்; பகுத்தறிவு மூளை.

பார்ப்பானில் வைதிகப் பார்ப்பானே மேல்; காஸ்மா பாலிட்டன், பார்ப்பானைவிட - என்பது பெரியார் கருத்து.

பெரியாரின் 95 - ஆம் ஆண்டு பிறந்தநாள் செய்தி என்ன?

“ எனது 95 ஆம் ஆண்டு பிறந்தநாள் துவக்கத்துக்கு வழமை போல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டி இருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன்.

அப்படி எழுதப்படும் இக்கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலரில் எழுத வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ இல்லையோ என்கிற பிரச்சினை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.

ஏனெனில், இன்னமும் நாம் இருப்பது போலவே - அதாவது இந்திய ஆட்சிக்குள் பிரஜையாய் சமுதாயத்தில் நாலாஞ்சாதி