பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

646

பகுத்தறிவு பகலவன் தந்தை


சூத்திரனாய் - சட்டப்படி சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசிமகனாய் - நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாய் - இருந்து வரும் அதே தன்மையிலேயே - இருப்போமோ என்கிற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன்.

நாம் கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ மதம் மாறிக் கொள்ளாமல் இந்துவாய் இருக்கும் வரை, நாம் நமது பண்டார சந்நிதிகள், சமணர், பவுத்தர், பகுத்தறிவுவாதி - எந்த நிலையிலிருந்தாலும் சூத்திரனாக, பார்ப்பானின் தாசி மக்களாக இருக்க வேண்டும்; இந்திய அரசியல் சட்டப்படி இந்தியப் பிரஜையாய் இருக்கும் வரையில்!

இந்த இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ நம் மக்களுக்கு ஒரு நாளும் சக்தியோ உரிமையோ ஏற்படும் என்று கருதவே இடம் இல்லை . அதனால் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயமான - நிர்ப்பந்தமான நிலையில் நாம் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியில் இருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும், இம்முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப்படி எழுதுகிறேன்.

நமக்கு இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்சினை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்சனையில் இன்றைய இழிவைப் போக்க ஏதாவது முயற்சி செய்துதான் ஆக வேண்டும். நமது மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள்; மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்கள் ஆவார்கள்.

ஆதலால் நாம் உடனடியாக இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி விடுதலை பெற்று, சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய தி.மு.க ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது. ஏனெனில் தி.மு.க ஆட்சி விரும்புவதெல்லாம், இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுய ஆட்சிதான் அது விரும்புகிறது.

மாகாண சுயாட்சி என்றால் அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாய் ஒரு காரியமும் செய்ய முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றிய பழைய மனுதர்ம நிலையை மிகப் பிரபலப்படுத்திக் கொண்டபடி இருக்கிறது. கர்ப்பக் கிரகத்திற்குள் பார்ப்பான் தவிர்த்துப், பண்டார சந்நிதி உள்ளிட்ட இந்து என்ற தலைப்பில் வரும் எந்தச் சூத்திரனும் செல்ல முடியாதென்று உச்ச நீதிமன்ற (சுப்ரீம்