பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

659



1973 டிசம்பர் 8,9 தேதிகளில் சென்னை பெரியார் திடலில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. முதல் நாள் காலையில் பெரியார் திடலுக்கு எதிரிலுள்ள சாலையில் ஒரு சிலா கருப்புக் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் வீரமணி ஒரு ஜீப்பில் ஏறிக் கொண்டு, கையில் ஒலிபெருக்கியுடன், அங்கு சென்று பேசத் துவங்கினார். அவ்வளவுதான் அத்தனை கருப்புக் கொடியரும் ஓட்டம் பிடித்தனர் மாநாடு துவங்கியது பகல்12 மணியாவில், ஒரத்தநாடு திராவிடர் கழகச் செயலாளர் எஸ்.பி.சாமி அவர்களின் மகள் செல்வி மணிமொழி ஒரத்தநாடு திரு.சுந்தரராசன் மகன் செல்வன் துரைராஜ் ஆகியோரின் திருமண விழாவினைத் தந்தை பெரியார் நடத்தி முடித்து வைத்தார். வரவேற்புரையில் வீரமணி, அண்ணா "தமிழ்நாடு" தந்தார்; அய்யா அவர்களே, நீங்கள் “தமிழருக்கே!” தாருங்கள் என்று உணர்ச்சி பொங்கிடக் கேட்டார்.

அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை உண்மையாக்குமாறு திருத்தப்பட வேண்டும்; கிரிமனல் சட்டம் போல் Uniform civil code வேண்டும்; தீண்டாமைக்குப் பதிலாக 'சாதி' என்று அரசியல் சட்டம் 17 வது விதியில் திருத்த வேண்டும்; பார்ப்பனப்பத்திரிக்கைகளை பகிஷ்காரம் செய்தல், கடவுள் மறுப்பு, இந்து அறநிலைய இலாக்கா ஒழிப்பு - ஆகிய பல தீர்மானங்கள் மாநாட்டில் இயற்றப்பட்டன.

9.12.73 அன்று மாநாட்டில் இறுதியாகப் பெரியார் பேரூரை நிகழ்த்தினார்:- “பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந்தருளியிருக்கும் பிரதி நிதிகளே! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே!

இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன் மூலம் எங்கே இது கலைந்து போய்விடுமோ என்று பயப்படுகிறேன். அவ்வளவு நல்ல தெளிவாக, யாருக்கும் விளங்கும் படியும், ஒவ்வொருவர் மனமும் உடனே காரியத்தில் இறங்கும் படியான உணர்ச்சி ஏற்படும்படியும், நல்லவண்ணம் அவர்கள் பேசினார்கள். எனக்கும் தெரியாத, இதுவரையிலும் நான் தெரிந்திருக்காத, அநேக அருமையான விஷயங்களை எல்லாம் பேசினார்கள். நாம் செய்வது ரொம்ப அவசியமான காரியம் - ஞாயமான காரியம் என்று கருதும்படி நல்லவண்ணம் விளக்கினார்கள். இனி நான் சம்பிராயத்துக்குத்தான் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டியிருக்கிறது.

தோழர்களே! நான் இந்த மாநாடு கூட்டி இருப்பதன் நோக்கம் போராட்டத்தை உத்தேசித்து அல்ல; அல்லது இந்த ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்கிற எண்ணத்தை உத்தேசித்து அல்ல; மனித சமுதாயமாகிய நம், சமுதாயத்திலே ஈனப்பிறவிகளாக, அசிங்கமான