பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

660

பகுத்தறிவு பகலவன் தந்தை


கருத்தில் இன்னொரு சாதியனுக்கு, அதிலும் நம் நாட்டில் பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டத்தானுக்கும் அடிமைகளாக, தாசி மக்களாக இருந்து வருவதே ஆட்சியின் தன்மை, என்கிற இழிலான நிலைமையிலே இருந்து மாற வேண்டும் என்று கேட்கிறோம். இது இயற்கை!

இப்போது, நண்பர் நமது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இந்தக் கோயில் அர்ச்சகர் வேலையாரும் பண்ணலாம் என்று தீர்மானம் பண்ணியுங்கூட, இந்த அரசாங்கம் செய்த சட்டம் செல்லாது என்று பண்ணி, நமது இழிநிலையைச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தி விட்டதனாலே, நமக்கு ஆத்திரம் கொஞ்சம் அதிகமாகிப் போயிற்று. அதனாலே உணர்ச்சி வந்தது. மாநாடு போட்டோம் இது ஒரு திருப்திகரமான மாநாடு. நமது ஆசைப்படி எல்லாமே நல்ல வண்ணம் நடந்து இருக்கிறது.

இப்போது நல்ல தீர்மானங்களைப் போட்டுவிட்டோம். அழகுக்காகத் தீர்மானம் போடவில்லை; கண்டிப்பாக இழிவு தீர வேணும், இது போகாவிட்டால் நம் கதி என்ன ஆகும் என்கிற நிலைமையிலே இந்தத் தீர்மானங்களைச் செய்து இருக்கிறோம். எனக்கு ஒரு பொறுப்புக் கொடுத்திருக்கிறார்கள்; எப்போது செய்கிறது என்கிறதைப் பற்றித் தலைவர் சொல்லுவார் என்று!

முதலாவதாக நான் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். மாநாடு முடிந்தவுடனே தீர்மானங்கள் மந்திரிகள், குடி அரசுத் தலைவர், இந்தியப் பிரதம மந்திரி இந்திரா அம்மாள் அவர்களுக்கும், மற்றும் பார்லிமென்ட் மெம்பர்களுக்கோ, நம் அரசாங்கத்துக்கோ, இன்னும் யார் யாருக்கோ அனுப்பி, அவர்கள் நம் சேதிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஆதரவான பதிலை அனுப்பி வைக்க வேணும் என்று கேட்கப் போகிறோம். அது வந்த பிறகு, நம் மக்களுக்கு அனுகூலமாக இல்லாவிட்டால், கிளர்ச்சியில் இறங்குவது என்று திட்டம் போட்டு இருக்கிறோம். பெரிய காரியந்தான்!

தோழர்களே! நான் நினைக்கிறேன்; இவ்வளவு பெரிய காரியத்திற்கு நிபந்தனை போட, கொஞ்சம் வாய்தா கொடுத்துதான் ஆக வேண்டும் வருகிற ஜனவரி மாதம் குடியரசு நாளாகிய 26ந் தேதி வரைக்கும் வாய்தா கொடுக்கலாம். 45 நாள் இருக்கிறது; போதும். நமக்கும் பிரச்சாரம் பண்ண நாள் வேண்டியதுதான். அதற்குள்ளே நம் மக்களுக்கு உணர்ச்சி மறந்து போகாது. ஆதரவு அதிகமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

அன்றைய முதற்கொண்டே நாம் சொல்லி வருகிறோம். இது சுதந்தரநாள் அல்ல, துக்க நாள் மோசடி, நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள் என்று. அதே போல், பிற்பாடு டாக்டர் அம்பேத்கரே ரொம்ப வருத்தப்பட்ட மாதிரி, அரசியல் சட்டமும் ஒரு மோசடி. அது