பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

661


ஒரு மனு தர்ம சாஸ்திரம். பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற காரியம் என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். யார் கவனிக்கிறார்கள்? அரசியல் வந்துவிட்டது என்றாலே, அவனவன் ஓட்டுக்கும், பதவிக்கும், மந்திரி வேலைக்கும் கவலையோடு இருந்தானே தவிர, சமுதாயத் துறையிலே நமக்கு இந்தக் கேடு இருக்கிறது என்று இன்றைக்கு யாருக்குக் கவலை இருக்கிறது.?

இன்றைக்கு நான் சொல்லுவேன் - நமது முன்னேற்றக் கழகத்துக்காரர் சரியாக இருக்கிறார் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில பேருக்கு இருக்கலாம். மற்றவர்களுக்கு ஏதோ அவர்கள் பதவி பட்டம் அது இது அந்த மாதிரி ஆகிப்போயிற்று நிலைமை. இந்த அரசியல் அவ்வளவு கீழ்த்தரமாகிப் போனதனாலே, அதிலே பிரவேசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்படுவதற்கு இல்லாமல் - அது இது அந்த மாதிரி ஆகிப்போயிற்று நிலைமை. இந்த அரசியல் அவ்வளவு கீழ்த்தரமாகிப் போனதனாலே, அதிலே பிரவேசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்படுவதற்கு இல்லாமல் - அது மூலமாக ஒரு பரிகாரமும் செய்கிறதற்கு இல்லை. இப்போது நாம்தான் ஏதோ கத்திக் கொண்டிருக்கிறோம். நமக்கும் அவ்வப்போது சரி பண்ணிக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர, நிரந்தரமாய் இல்லை. மந்திரிமார்களிலேயும் சில பேருக்கெல்லாம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது. சில பேர் பதவியை விட்டு வந்து விடுகிறேன் என்று கூடச் சொன்னார்கள். நண்பர்கள், போகட்டும்!

அநேகமாக நான் சொல்லுகிறேன், பார்ப்பானோடு போராடுகிற கடைசிப் போராட்டம் என்று இதை வைத்துக் கொள்ளணும். இதிலே வெற்றி பெறவில்லையானால், அப்புறம் நமக்கு வாய்ப்பே இல்லை! இப்போது. எப்படி இதை அடக்குகிறது. அழிக்கிறது என்று அவர்கள் ரொம்பத் திட்டம் போடுவார்கள். நாம் எவ்வளவு உறைப்பாக, துணிச்சலாக, கஷ்டத்தை ஏற்றுக்கொள்கிற தியாக உணர்ச்சியோடு இருக்கிறோமோ அதைப்பொறுத்துதான் இதற்கு ஏற்படுகிற மதிப்பு இருக்குமே தவிர, சும்மா வேஷத்தினாலே மதிப்பு ஏற்படும் என்று நினைக்க முடியாது. அந்த மாதிரி உணர்ச்சியோடு நமக்கு இதிலே வாய்ப்பு வந்து சாதாரணமான முறையிலே இதற்கு அடக்கு முறை வருகிறது என்றால், நமக்கு வெற்றியைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை .

நாம் கூடுமான வரைக்கும் பெண்களை இதிலே பூற வைக்கணும். ஆண்கள் தான் ரொம்பபேர் வர முடியும்; இருந்தாலும், ஆயிரம் பேர் போனார்கள் என்றால் அதிலே பெண்கள் 100 பேர் இருக்கணும். கிளர்ச்சிக்கு அது ரொம்பத் தூண்டுகோலாய் இருக்கும். பிடிக்கப் பிடிக்க அடுத்த அணி வந்து கொண்டே இருக்கவேணும்.