பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

662

பகுத்தறிவு பகலவன் தந்தை



இயக்கத்துக்கு இறங்குகிறவர்கள், மன்னிக்கணும், ரொம்ப ஒழுக்கமாக இருக்கணும், இந்த கிளர்ச்சிக்கு ஒரு கவுரவம் இருக்க வேணும். நாணயம் இருக்க வேணும். பார்க்கிறவன் எல்லாம் கூட இதை மதிக்கணும். அதிலே ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நம் மக்கள் எடுத்துக் கொள்கிற முயற்சி எந்த விதமான விரோத உணர்ச்சி அல்ல, குரோத உணர்ச்சி அல்ல, யார் பேரிலேயும் வருத்தம் இல்லை; நம் காரியத்துக்காகத்தான் நாம் செய்கிறோம் என்கிற மாதிரிதான் நடத்தை, காரியம் எல்லாம் இருக்க வேணும், மனதிலேயே வெற்றி பெறுகிறோமோ, தோல்வி அடைகிறோமோ என்கிற எண்ணமே இருக்கக்கூடாது. நமக்கு ஞாயம் இருக்கிறது. செய்கிறோம். மக்களும் தாராள மனப்பான்மையோடு இருக்கிறார்கள் - அரிசி, பணம், கேட்டதற்கு மேலேயே கிடைக்கிறது. இதை ஒரு தொந்தரவாக யாரும் நினைக்கிறவர்கள் இல்லை ; ஒருவர் கூட இல்லை .

மனதிலே நினைத்துக் கொள்ளுங்கள். நாம் ஒன்றும் தப்புப் பண்ணவில்லை. முன்னாடியே செய்திருக்க வேண்டிய காரியத்தைத்தான் இப்போது செய்கிறோம். இதைச் செய்யாததனாலே இன்னும் இழிவிலே இருக்கிறோம் என்கிற தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. நமது தோழர்கள் எல்லாரும் சொன்னதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறேன்.

இந்தப் பார்ப்பனப் பத்திரிக்கைக்காரர்களும் தங்களின் சுய நலத்தை உத்தேசித்தாவது யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டியது. இன்னமும் இப்படியே இருக்க வேணும் என்று அவர்கள் நினைத்தார்களானால், அது அவர்கள் தப்புத்தான். நாளா வட்டத்திலே அப்படியே போய்விடும் என்று கருத வேண்டாம் என்று - விஷயங்களை எல்லாம் உங்களுக்கு எடுத்துச் சொல்லி, நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். இப்போது நேரம் இரவு 8 மணி ஆகிறது. முடிக்கிறேன் நான். தயவு செய்து நீங்கள் எல்லாம் நன்றாக, மனதிலே உற்சாகமாக, எங்களுக்கு உற்சாகம் ஏற்படும்படியான மாதிரியிலே, நீங்கள் மற்றும் தினம் அங்கங்கே நடைபெறும் காரியங்களிலிருந்து, இதற்கு ஒரு நல்ல நேரம் என்று கருதிச் செய்யணும். வேறே ஒன்றும் நான் அதிகமாகச் சொல்லவில்லை .

மற்றபடி, நீங்கள் இவ்வளவு நேரம் காது கொடுத்ததற்கும், இரண்டு நாளாக நீங்கள் உங்களுடைய வேலைவெட்டி எல்லாம் விட்டுவிட்டு வந்து உற்சாகமூட்டி இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்ததற்கும், மற்றும் பொது மக்கள் இதற்கு ஆதரவாய் என்னென்ன உதவி பண்ணவேணுமோ அவைகளை எல்லாம்