பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

664

பகுத்தறிவு பகலவன் தந்தை


எஞ்சினை மாற்றிட உதவினார் அமைச்சர் ராஜாராம். 19ந் தேதி அவர் தம்மைப் பார்க்க வந்தபோது, "அய்யா வாங்க; திருச்சியிலிருந்து நான் இங்கு வர 400 ரூபாய் ஆகும். முன்னே , இப்போது 60 ரூபாயில் வந்து விட்டேன். நன்றிங்க!" என்றார் பெரியார். ராஜாராம் மிகுந்த உரிமைக் கோபத்துடன், யாரிடத்தில் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள், என்று கடிந்து கொண்டார்.

19.12.73 அன்று பெரியார் சென்னையில் இருந்தார். அடுத்து 21ந் தேதி திருவண்ணாமலை செல்ல வேண்டும். அன்று ஒரு நாள் ஏன் சும்மா இருக்க வேண்டும்? 12.10.1970 ல் தியாகராய நகரில் திடீர் பிள்ளையார் பற்றிப் பெரியார் பேச இருந்த கூட்டம் ஒத்திவைக்கப் பட்டு, அந்தத் தோழர்கள் கூட்டத்திற்காகத் தந்திருந்த பணம் பெரியாரிடமே இருந்தது. இது பெரியாரின் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. வந்தது போலும் அதற்குத் திடீரென்று, இந்தப் பத்தொன்பதாந்தேதியை ஒதுக்கினார் பெரியார். மூன்றாண்டுகட்கு முன்னர் குறிப்பிடப்பட்ட அதே தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகில், அதே சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில், 19.12.73 அன்று, பெரியார் எனும் முதிர்ந்த போர்முரசம் அதிர்ந்தது. முத்து முத்தாய் உதிர்ந்தன கருத்துக்கள். விதிர்த்து நடுங்கிய வேதகால ஆதி மூடவைதிகம்!

பேருரை தொடங்குகிறது:- “பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே!

இன்றைய தினம் இந்த இடத்திலே, சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாகச் சென்னையில் 10 நாட்களுக்கு முன்னால் நடந்த மாநாட்டுத் தீர்மானத்தை விளக்கவும், மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படிப் பேரறிஞர்கள் பலர் அத்தீர்மானங்களை விளக்கியும், மற்றும் பல நல்ல அரிய விஷயங்களையும், எல்லாம் நல்ல வண்ணம் எடுத்து விளக்கினார்கள். என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக இதிலே குறிப்பிட்டு இருக்கிறபடியினாலே, நானும் சில வார்த்தைகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தோழர்களே! நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக, நமது நண்பர் உயர்திரு வீரமணி அவர்கள், நம்முடைய கழக லட்சியச் சொல்லை விளக்கினார்கள்! நானும் விளக்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அதிலே நம் கழகத் தோழர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இருக்காது. புதிதாக வருபவர்களுக்கும், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கிறவர்களுக்கும் கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டு இருந்தாலும் இருக்கலாம்; என்னடா, கடவுளை இப்படி எல்லாம் சொல்லுகிறான் - என்று கடவுளைச் சொல்லுகிறதோடு இருக்காமல் கடவுளை நம்புகிறவர்களைக்கூட