பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

666

பகுத்தறிவு பகலவன் தந்தை


கேட்பானல்லனா? அப்போது சொல்லங்கள்: சும்மா கேட்டுச் சிரித்து விட்டுப் போவதால் என்ன பயன்? இது 2,000 வருஷமாய் இருக்கிறது, ஜனசாதி என்று. முஸ்லீம்களில் ஈனசாதி கிடையாது. ஒருவனுக்கு கொருவன் தொட்டுக் கொள்வான். ஒரே பீங்கானில் சாப்பிடுவான், எச்சில் கிடையாது. அவ்வளவு சகோதரத்துவம் இந்த மதத்தின் தன்மை. கிறிஸ்தவனும் கவலைப்படமாட்டான். சாதி என்று ஒருவனைக் குறைசொல்ல மாட்டான். பார்ப்பானும் அதே மாதிரி தங்களுக்குள்ளே மேல்சாதி கீழ்சாதி கிடையாது; எல்லாரும் ஒஸ்தி. நாம் எல்லோரும்தான் அவனுக்குத் தேவடியாள் மக்கள். இப்படி இருக்கக் காரணம் என்ன?

நண்பர்கள் சொன்னார்களே, அது போல, நாம் இந்த 50 வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல், நம் எதிரிலே சூத்திரன் என்று சொல்ல மாட்டான். வீட்டிலே எல்லாம் 'இந்த சூத்திரப் பயல்கள்' என்றுதான் பேசுவான். நாம் இந்த இழிவிலே இருந்துதான் நீங்கணும். சட்டத்திலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ நாங்கள் கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம். எங்களைத் தவிர நாதி இல்லையே இந்தநாட்டில்! எத்தனை நாளைக்கு நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்? நாம் ஒழிந்தால் நாளைக்கே மாற்றிவிடுவானே!

நம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள், 'கல்தானே! யார் வேண்டுமானாலும் பூசை பண்ணலாம். ஆனால் முறைப்படி செய்யணும்' என்று யாவருக்குமே அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட் - சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட்தான் - பார்ப்பனத்தியால் நியமிக்கப்பட்டவர்கள் - கோயிலுக்குள்ளே போகிறது சாஸ்திரவிரோதம் - ஆகமப்படி செய்ய வேணும் என்றார்களே - எந்த ஆகமத்தை, எவன், எப்போது, எழுதினான்? யாருக்காவது தெரியுமா? எழுதியவனுக்கு வயது என்ன? யாராவது சொல்ல முடியுமா?

நாம் மிகப்பெரிய சமுதாயம். நாம் எவ்வளவு முன்னுக்கு வரவேண்டியவர்கள். நாதியற்றுப் போய்க் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்! வெள்ளைக்காரனைப் பாருங்கள்! நாம் வேட்டி கட்டிகிட்டு இருந்த போது, அம்மனமாய்த் திரிந்தவர்கள், ஆகாயத்துக்கு மேலேபோய், சந்திரனில் அல்லவா உட்கார்ந்து விட்டு வருகிறார்கள், இன்னும் அவர்கள் செய்கிற அதிசய அற்புதங்களைப் பார்த்தால், உங்களுக்குப் புரியக்கூடப் புரியாதே!

அருமைத்தோழிகள்! இப்போது நமக்கு மான உணர்ச்சி வேணும்; இழிவு நீங்கவேணும் அப்புறம் மேலே போகலாம்; போகணும் சுயமரியாதை இயக்கம் வராதிருந்தால் நமக்குப் படிப்பு ஏது சொல்லுங்கள், 100க்கு 10 பேர் கூடப் படிக்க வில்லையே! நாம் தான்