பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

681



அச்சுத் ஆர்க்கிட்டெக்ட் எனப்படும் கட்டடக் கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி, பெரியார் நினைவிடத்தில் சிறிய மேடை ஒன்று கட்டப்பட்டு, நடுவில் அறிவுச் சுடரை ஏந்தி நிற்கும் கரம் ஒன்றின் வடிவமைப்பு அழகுற எழுச்சியுற அமைக்கப்பட்டது. இரு மருங்கிலும் தென்னை மரங்கள், பூச்செடிகள் வளர்க்கப்பட்டன. பெரியாரின் நூல்கள் போல, இரும்பில் செய்யப்பட்டு, நிலையாக இருக்குமாறு, விவரமாக வண்ணப் பூச்சுடன் வைக்கப்பட்டன. சென்னை வருவோர் அமைதியும், உணர்வும், புத்தெழுச்சியும் பெற இங்கு ஒருமுறை வருகை தரும் வாடிக்கை கொண்டனர். மாநகரில் உள்ளாரும், தமது வாழ்நாளின் சிறப்பான தினங்களில் வந்து செல்வதும் வழக்கமாகும். பெரியார் நினைவுப் பகுத்தறிவுப் படிப்பகம் -ஆய்வகம் ஒன்று இரு மாடிக் கட்டடமாக எழுப்பப் பெற்றுக், கழகத்தின் கருவூலமான நூல்களும், பத்திரிகை வால்யூம் தொகுப்புகளும், ஒழுங்குற அழகுறப் பேணிக் காக்கப்படுகின்றன. இன்றும் பெரியாரைப் பற்றியோ, திராவிட இயக்கம் பற்றியோ, பகுத்தறிவு - சுய மரியாதைக் கொள்கைகள் குறித்தோ ஆய்வு நடத்துவார்க்கு வழிகாட்டும் ஒரே இடமாக இது விளங்குகின்றது.

6.1.1974 திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக நிர்வாகிகள் குழுவில் ஈ.வெ.ரா. மணியம்மையார் தலைவராக ஒரு மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.வீரமணி தொடர்ந்து பொதுச் செயலாளராக விளங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதே போன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன டிரஸ்டின் தலைவராக வீரமணியும், செயலாளராக மணியம்மையாரும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். பெரியார் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து திராவிடர் கழகம் நடைமுறைப்படுத்தி வரவேண்டுமெனக் கழகத் தோழர்கள் சூளுரைத்துக் கொண்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர், முன்னதாகப் பெரியார் திருமுன்னர் நிபந்தனையோடு கூடிய வாக்குறுதி ஒன்று தந்ததற்கேற்ப, ராஜாஜி மண்டபத்திற்கும் சிம்ப்சன் கம்பெனிக்கும் எதிர்ப்புறத்தில், சிற்பி கோவிந்தசாமியால் அமைக்கப்பட்ட, பெரியார் உட்கார்ந்திருக்கும் வடிவிலான அழகிய சிலை ஒன்றினை, நாவலர் தலைமையில் 25.12.74 மாலை 6.30 மணிக்குத் திறந்து வைத்தார். அவ்விழாவில் பேசிய பேராசிரியர் கே. அன்பழகன் வயதில் குறைந்தவர்களுக்குச் சிலை எழுப்புவது சரியல்ல என்று கருத்துரைத்தார். விழாவில் என்.வி. நடராசன், சி.பி. சிற்றரசு, மணியம்மையார். வீரமணி ஆகியோர் பேசினர். பெரியாரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே, தான் உயிர் வாழ்வதாகக் கருதும் மணியம்மையார், அடுத்து கலைஞரின் சிலையினை நிறுவுவதற்கு, இக்கருத்து அனுசரணையாக இல்லையே எனக் கவலையுற்றார். வீரமணியைக் கலைஞரிடமும்,