பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

683


இது புண்படுத்தியதாகக் கலைஞரின் அரசு, மணியம்மையார் மற்றும் தோழர்கள் மீது வழக்குத் தொடுத்தது. அன்று முன் கூட்டியே கி.வீரமணியும் மற்ற ஏழு தோழர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர். எனினும் ராமன் முதலிய உருவங்கள் எப்படியும் கொளுத்தப்பட்டதால், மணியம்மையாருடன் மற்றும் 13 தோழர்களும், இரவு கைது செய்யப்பட்டனர். ஆனால் தி.மு.க. ஆட்சி இருந்த வரையில் வழக்கு நடைபெறவில்லை. அட்வைசர்களின் ஆட்சியில் வழக்கு நடைபெற்றது. 6 மாதத் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு சிட்டி சிவில் கோர்ட் அப்பீலில் இது தள்ளுபடி ஆயிற்று. ராவண லீலா நடத்தியது சரிதான் என்றும் கோர்ட் கூறியது.

அடுத்து, கழகத் தலைவரான அம்மையாரின் சாதனையாகப் பெரியார் பில்டிங்ஸ் எழுப்பப்பட்ட செய்தியினைக் கூறலாம். பெரியார் திடலின் முகப்பில், சுமார் 15 லட்ச ரூபாய் செலவில், பெரிய தொரு அடுக்கு மாடிக் கட்டடத்தைக் கட்டி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துச் சிறுமிகளால் (Foundlings) அது திறந்து வைக்கப்பட்டது. மாதம் ஏறக்குறைய 23 ஆயிரம் வாடகை தருமளவுக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு, அதுவும் ஓர் சொத்தாக இணைக்கப்பட்டது. 1976 டிசம்பரில் வருமானவரி பாக்கிக்காக இக்கட்டடம் ஜப்தி செய்யப்பட்டதாக, நல்ல எண்ணம் படைத்த நம்தமிழ் ஏடுகள் சில செய்தியாகப் பரப்பின வதந்தியை! அஃது உண்மையன்று.

ஏற்கனவே திட்டமிட்டவாறு 17.9.1976 அன்று இக் கட்டடம் திறக்கப்பட இருந்தது. அட்வைசர்கள் ஆட்சி 16 முதல் 18 வரை அம்மா, புலவர் இமயவரம்பன் முதலியோரைக் கைது செய்து வைத்து விட்டதாலும், பெரியார் திடலில் யாரும் வரவிடாமல் செய்ததாலும், இவ்விழா ஒத்தி வைக்கப்பட்டு, 20.2.1977 அன்று பண்ணுருட்டி நடேசன் தலைமையில் அழகுமணி, கலைமணி, கண்மணி ஆகிய குழந்தைகளால் (Foundlings) திறந்து வைக்கப்பட்டது.

கழகக் கட்டுப்பாட்டை மீறியதாகத் தலைவர் மணியம்மையார் அவர்களால் நடவடிக்கைக்கு உள்ளாகி 27.12.74 அன்று சென்னை டி.எம்.சண்முகம், 23.9.75 அன்று திருவாரூர் கே. தங்கராசு, 16.11.75 அன்று திருச்சி வே.ஆனைமுத்து ஆகியோர் திராவிடர் கழகத்திலிருந்து விலக்கப்பட்டனர். 18.9.1975 அன்று திருவண்ணாமலையில் மணியம்மையார் தலைமையில் பெரியார் சிலையினை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.

1973 டிசம்பர் 8, 9 தேதிகளில் நடந்த சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்களுக்கு இணங்க, சாதிப் பிரிவை அரசியல் சட்டத்தினின்று அகற்றிடக் கோரி, அம்மையார் தலைமையில் வடநாட்டு மத்திய அமைச்சர்களுக்குக் கருப்புக்கொடி காட்டப்-