பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

684

பகுத்தறிவு பகலவன் தந்தை


பட்டது. அஞ்சல்மனைகள் முன்பு மறியல் நடத்தப்பட்டது. மணியம்மையார் அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையத்தின்முன் மறியல் செய்தார்கள்.

காமராஜர் 1975 அக்டோபர் இரண்டாம் நாள் மறைந்தார். அண்ணாவுக்கும், இராஜாஜிக்கும், பெரியாருக்கும் நினைவிடங்கள் அமைத்துச் சிறப்பித்த கலைஞர், காமராசருக்கும் நினைவு மண்டபம் எழுப்பினார். அவரது மறைவுக்குப் பிரதமர் வந்து சென்றார்; என்ன முடிவோடு?!

சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தோற்றுவித்து 50 ஆண்டுகள் ஆயின. மகத்தான சமுதாயப் புரட்சியை விளைவித்த அப்பெரும் இயக்கத்திற்குப் பொன்விழா வேண்டாமா? பெரியார் இல்லாத குறை தெரியாவண்ணம் கொண்டாட வேண்டுமே! பெரியாரின் சுயமரியாதை இயக்கமெனும் பிராணவாயுவைச் சுவாசித்த புழுவும் புலியாகியிருக்கிறதே! புல்லும் மரமாகி யிருக்கிறதே! கல்லும் களிமண்ணும் நல்ல மனிதனாகியிருக்கிறதே! மறக்கலாமா? என்று அந்த விழாவினைத் தஞ்சைத் திருநகரில் கொண்டாட முடிவெடுத்தனர். 1975 டிசம்பர் மூன்றாம் வாரத்தில், 22 முதல் 24 முடிய தஞ்சை திலகர் திடலில் அமைக்கப்பட்ட பந்தலில் பெருவிழா; பொன்விழா முதல் வரும், அமைச்சர் பெருமக்களும், கழகத் தோழர்களும், கருஞ்சட்டை வீரர்களும் பங்கேற்க ஏற்பாடு. 50 ஆண்டுகளாகச் சுயமாயாதை இயக்கத்தில் இருந்து வந்தோர், இப்போது எத்தனை பேர் உயிருடனிருப்பர்? நாகை என்.பி. காளியப்பன் தவிர வேறு யாரும் நிலைத்திருப்பதாக நினைவுக்கு வரவில்லையே!

எனவே, குறைந்த பட்சம் வெள்ளிவிழாக் காணும் அளவுக்காவது - அதாவது ஓர் இருபத்தைந்தாண்டு - காலமாகவாவது - இயக்கத்தில் இருப்போர்க்குக் கேடயம் வழங்கவும் ஏற்பாடு. தஞ்சையில், சுயமரியாதை இயக்கப் பொன்விழா டெல்லியில், திராவிட இயக்கங்களுக்குக் குழிபறிக்கும் சதி விழா-இரண்டும் ஒரே நேரத்தில் அமைந்தன! தஞ்சை விழாவில் இருக்க வேண்டிய அளவு சிறப்பும் மகிழ்ச்சியும் காணப்படாமல், பீதியும் கலக்கமும் மிகுந்திருந்தன. முதல்வரும் உடல்நலிவால் பங்கேற்க முடியவில்லை!

எதிர்பார்த்தது நடந்துவிட்டது! 31.1.76ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, சட்ட மன்றம் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. 31-ந் தேதி மாலை 7 மணிக்கு ஒரே நொடியில் சென்னை நகரத்தில் மட்டும் 2,000 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன! பொழுது விடிவதற்குள் சிறைச்சாலைகள் நிரம்பின. சென்னைச் சிறைச்சாலை தனி வரலாறு படைத்து, “உலகப்புகழ்”(?) பெற்றது. திராவிடர் கழகத்