பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

700

பகுத்தறிவு பகலவன் தந்தை


மற்றவர்கள் ஆளுக்கு ஒரு சாமான் சுமந்துதானே தீர வேண்டும்? மிகுந்த கனமான 3, 4 புத்தகச் சிப்பங்களை அப்போதெல்லாம் மணியம்மையார் பொறுமையுடன் தூக்கிச் செல்வதுண்டு. "நானே ஒரு மூட்டையைச் சுமக்கும் போது, அதன் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, அது ஓர் அவமானம் தரக்கூடிய இழிவான செயல் என்று நான் கருதியதில்லை" என்று பெரியாரே சொல்கிறாரே

தந்தையார் வெங்கட்டநாயக்கர் தம் சொத்துகளை ஒரு டிரஸ்டாக ஏற்படுத்திடக் காரணமே, பெரியாரல்ல; பெரியவர் ஈ.வெ.கி. தான். அவர் மிகுந்த செலவாளி. ஈ. வெ. கிருஷ்ணசாமியாரின் முதல் மனைவி நாகம்மாள், சேலம் தாதம்பட்டி எம். ராஜுவின் அத்தை. இவருக்குப் பிறந்த ரங்கராம், தாயாரம்மாள் ஆகிய இரு குழந்தைகளும் மதனப்பள்ளி சானடோரியத்தில் இறந்து விட்டனர். இங்கிலாந்தில் பயின்று வந்தவரான ரங்கராமுக்கு, ஆனைமலையில் ரங்கநாயகி அம்மையாரைப் பெண்பார்த்து வைத்திருந்தபோது, அவர் இறந்து போனதால், ஈ. வெ.கி. தமது முதல் மனைவி உயிருடன் இருந்தபோதே, இந்த ரங்கநாயகி' அம்மாளை இரண்டாந்தாரமாக மணந்து கொண்டார். இவருக்கு மிராண்டா (தீன தயாளு) சம்பத்து (சம்பத் குமார வேங்கடவரதன்) இரு குழந்தைகள் பிறந்த பின்னரே, 1927ம் ஆண்டில் முதல் மனைவி நாகம்மாள் மறைந்து போய்விட்டார். சிக்கனமில்லாத ஈ.வெ.சி. ஒரு முறை 10,000 ரூபாய் கடன்பட்டு விட்டார். வெங்கட்டநாயக்கர் அறிந்து வருந்தி, பத்தாயிரம் ஒரு ரூபாய் வெள்ளிப்பண நாணயங்களை ஒரு விகப்பலகை மீது வரிசையாக அடுக்கி வைத்து. “இந்தாப்பா கிருஷ்ணா உன்னை இன்றைக்கு நான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறேன்! இனிமேலாவது, இதோ உன் தம்பி ராமனைப் போலச் சிக்கனமாக நடந்து கொள்!" என்று கூறினார். தந்தையார் பார்வையில் பெரியார் எப்படிக் கருதப்பட்டார் என்பதை விளக்கும் நிகழ்ச்சியன்றோ இது!

தனிப்பட்டவர் யாருக்காகவும் எவரிடத்திலும் எப்போதும் பெரியார் சிபாரிசு செய்ததில்லை ; ஒரே ஒருவருக்காக மட்டும் மூன்று முதலமைச்சர்களிடத்தில் பரிந்துரை புரிந்துள்ளார். கல்வித்துறை இயக்குநராக்குமாறு காமராசரிடமும், கல்வி ஆலோசகராகப் போடுமாறு அண்ணாவிடத்திலும், துணைவேந்தராக்குமாறு இரண்டு தடவை கலைஞரிடமும், பெரியார் தாமே தமது இயல்புக்கு மாறாகச் சிபாரிசு செய்திருக்கிறார்.

பல மருத்துவ மனைகளுக்கும் சென்று, அங்கு கோரிக்கையில்லாமல், பெற்றோர் யாரென்றும் தெரியாமல், கை விடப்பட்டுக் கிடக்கும் குழந்தைகளைக் (Foundlings) கேட்டு வாங்கி வந்து, வைக்கம், வளர்மதி, பாப்பு, அமலா என்றெல்லாம் பெயர் சூட்டி, அவர்களை அன்போடு செல்லமாகப் பெரியார் வளர்த்து வந்த பாங்கு,