பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

702

பகுத்தறிவு பகலவன் தந்தை


ஆடவர்கள் காரிலும், மகளிர் வேனிலும் பயணம் செய்தனர், எங்கேயாவது வேன் நின்றால், காரிலிருக்கும் ஆண்கள் இறங்கி ஓடி, அய்யா என்ன?" என்று வேனுக்குள் ஏறுவார்கள். "அவர்கள் உண்மையில் என்னைப் பார்க்கவா இப்படி ஓடிவருகிறார்கள்? ஏன் அம்மா?" என்பார் பெரியார். தத்தம் மனைவிமார்களைக் காணும் ஆவலில் வருவதாக, இலைமறைகாயாகப் பெரியார் எடுத்துக் காட்டினார்!

சீனாவில் ஆடவரும் மகளிரும் ஒரேமாதிரியான Unisex ஆடை அணிவது போல் நம் நாட்டிலும் இருக்க வேண்டும் என்பது பெரியார் கொள்கை. இதை முதலில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அமுல் செய்யலாம் என்று ஒருவர் ஆலோசனை கூறினார். பெரியாரின் அருகிலிருந்த மணியம்மையார், “அப்படியானால் 110 செட் டிரஸ் வேண்டுமே" என்றார்கள் “அம்மாவுக்கா?" என்று கேட்டு, நிறுத்திக் கொண்டார் பெரியார். அனைவரும் கொல்லென்று சிரித்ததும், அம்மாவுக்கு விஷயம் புரிந்து, வெட்கத்துடன் ஓடிவிட்டார்கள் உள்ளே!

பெரியாருக்கு அபாரமான எஞ்சினீரிங் ஸ்கில் இருந்தது. பந்தல்கள், கட்டடங்களுக்கு அவரே கைத்தடியால் அளவெடுத்துக், கையினால் பிளான்கள் வரைந்துள்ளார். எஸ்டிமேட் தாமே போட்டு விடுவார்.

சர். சி.வி. ராமன் ஒரு நாத்திகர் என்பதும், பெரியாரிடம் ஈடுபாடு உள்ளவர் என்பதும் பலருக்குத் தெரியாது. அதனால் நமசிவாயம் லேப் என்று ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்காகப் பூண்டிக்கு அவரை அழைத்த நீரியல் விஞ்ஞானி பி.குமாரசாமியிடம் “நீங்களும் என்னைப் போல ஒரு நாத்திகர் என்பதால் வருகிறேன். இந்தச் சம்பிரதாயமெல்லாம் எனக்குப் பிடிக்காது” என்றார் சி.வி. ராமன்.

1955-ஆம் ஆண்டு தேசியக்கொடி எரிப்புப் போராட்டம் நடத்துவதாகப் பெரியார் அறிவித்திருந்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம். அவரது தலையீட்டிலும் உறுதிமொழியிலும் பெரியார் தமது போராட்டத்தை ஒத்தி வைத்தார். முதலமைச்சருடன் அரசியல் ரீதியாகச் சரியான, சுமுகமான சூழ்நிலை இல்லை பெரியாருக்கு! அப்போது தஞ்சைப் பகுதியில் புயல், வெள்ளத்தால் பலத்த சேதம். பெரியார் தமது அரசியல் மாற்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, மனிதாபிமான உணர்வு. உந்தியதால் முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு ஆயிரம் ரூபாய் 7.12.1955 அன்று அனுப்பி உதவினார்.

"எனக்குச் சுதந்தர நினைப்பு! சுதந்தர அனுபவம், சுதந்தர உணர்ச்சி உண்டு. அதை உங்கள்மூன் சமர்ப்பிக்கின்றேன் என்னைப் போலவே உங்களது சுதந்தர நினைப்பு, சுதந்திர அனுபவம்