பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

70



1916-ல் பார்ப்பனரல்லாதார் நலன்களைப் பாதுகாக்க, நீதிக்கட்சி துவக்கப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்திலேயே டாக்டர் அருண்டேல், டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோர் ஈடுபட்டு, ஸ்மார்த்தப் பார்ப்பனர் சிலர் உதவியுடன் ஹோம்ரூல் என்ற பெயரால் மிதவாதக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

காந்தியார் தென்னாப்பிரிக்காவிலிருந்து அப்போதுதான் இந்தியா திரும்பினார். ஹோம்ரூல் இயக்கத்தினை முறியடித்து, ஒத்துழையாமை இயக்கத்தை வலியுறுத்தி வந்தார். அவருக்கு ஆதரவாக வைணவப் பார்ப்பனர்கள் திரண்டனர். இராசகோபாலாச்சாரியார்தான் பிரதம தளபதி!

ஈ.வெ. ராமசாமியின் தீவிரமான முற்போக்கு எண்ணங்களை நன்கு உணர்ந்திருந்ததால், இராசகோபாலாச்சாரியாரின் குழுவினர், அடிக்கடி அவரை ஈரோட்டில் வந்து சந்தித்துக் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபடத் தூண்டினர். நகரசபைத் தலைவராக நற்பணி ஆற்றியதற்காக, ராவ் பகதூர் பட்டம் வழங்கிடப் போவதாய், அரசின் சார்பில் ஒருபுறம் ஆசைவார்த்தைகள் பேசப்பட்டன. சபலத்துக்கு ஆளாகும் ஈனபுத்தியா ஈ.வெ. இராமசாமிக்கு?

அவரே என்ன சொல்கிறார்:- "பொது மக்களின் சுயமரியாதைக்கும் உரிமைக்கும் விடுதலைக்கும் ஆபத்தான இயக்கம் என்று எதையாவது நான் கருதினால் அதை அடியோடு அழிக்க நான் பின்வாங்கமாட்டேன். எவ்விதப் பழியோ அபகீர்த்தியோ ஆபத்தோ வருவதானாலும் அவற்றைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் என்னால் கூடியதைச் செய்துதான் தீருவேன்.

நான் பொது வாழ்வில் உழைக்க ஆரம்பித்த பிறகு இக்கொள்கையையே என்னால் கூடியவரை அனுசரித்து வந்திருக்கிறேன். உதாரணமாக ஹோம்ரூல் கிளர்ச்சியின்போதும், ஈரோட்டில் நடந்த கொடித்தகராறில் நானே முன்னணியில் இருந்ததும், என் வீட்டில் கொடி கட்டினதும்; ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில், அது தேசத்துரோகமான கட்சி என்று நமது பார்ப்பனர்கள் செய்த பிரச்சாரத்தில் ஏமாந்துபோய், அதற்கு எதிராக (Madras Presidency Association) சென்னை மாகாணச்சங்கம் ஏற்படுத்துவதற்காகக் கூட்டிய முதல் கூட்டத்திற்கு என்னுடைய முழு ஆதரவையும் கொடுப்பதாக வாக்களித்து 1000 ரூபாய் தந்தியில் அனுப்பியதும், அக்கூட்டத்திற்கு முன்னணியில் இருந்து மாநாடுகள் முதலியன நடத்தியதும், திவான்பகதூர் கேசவப் பிள்ளை தலைமையில் நான் உப தலைவராக இருந்ததும்; பிறகு ஹோம்ரூல் கிளர்ச்சியில் உள்ள சில புரட்டுகள் வெளியானதும், அதை ஒழிப்பதற்குச் சட்டவரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆனால், வெள்ளைக்காரர்களை