பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

78


கலவையாகிச் சுவை மிக்க தின்பண்டமாய்க் கேட்போர் செவிப் புலனில் தேன்மாரியாய்ச் சென்று விழும். யாரேனும் கேள்வி கேட்டுவிட்டால்தான் சுறுசுறுப்பும் சூடும் அதிகமாகும் அவருக்குப் பேச்சு மேடையில்!

நாள்தோறும் பல்துலக்குதலோ, குளித்தலோ, ஆடைமாற்றுதலோ அவசியமான கடமைகள் என அவர் கருதுவதில்லை. அவற்றுக்கு முக்கியத்துவமும் தருவதில்லை. அதேபோலக், கிடைத்த உணவை வயிறுநிரம்பச் சாப்பிட்டுவிடுவார்; அதனால் தொல்லைகள் ஏற்படினும் பொருட்படுத்துவதில்லை! மிகச் சாமான்ய மக்களும் தம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு, கடினமான விஷயங்களையும், உடைத்து நொறுக்கி நுட்பமாய் எளிமையாய் உண்ணத் தருவதுபோல், விளக்குவார். அவர்கள் மூளையில் பல்லாண்டுகளாக அடிமை மிடிமைகளால் ஏறியிருக்கும் பழமைத் தூசியைத் துடைத்துக் கருத்துகளைக் குடியேற்றுவார். படிக்காதவர் விளங்கிக் கொள்ளுமாறும், படித்தவர் சிந்திக்குமாறும் பேசுவார். இப்படிப் பேச்சு வன்மையில் வெற்றி கண்டவர் இந்திய வரலாற்றில் இவர் ஒருவரே ஆவர்! உலகின் நெடிய வரலாற்றிலோ சாக்ரடீஸ், ஏசுகிறிஸ்து - ஆகிய மிகச் சிலரையே கூறமுடியும்!

மதுவிலக்குக் கொள்கையும் அப்போது ஈ.வெ. ராமசாமிக்கு மிகவும் உடன்பாடான ஒன்றாகும். இந்தக் கொள்கையின் வெற்றிகரமான நடைமுறைப்பாட்டிற்காக ஈ.வெ.ரா. கையாண்ட யுக்திகள், செயல்கள் உலகில் யாரும் எண்ணிப் பார்க்கக்கூட இயலாத அளவு சிந்தனை செல்வது மகத்தானவை. வேறு யாருக்கும் இந்த வழியில் சிந்தனை சொல்வது அரிதாகும். கள் குடிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டு கள்ளுக் கடைகளின் முன் அமைதியாக மறியல் செய்ய வேண்டுமென்பதே காந்தியடிகளாரின் ஆணை. மதுவினால் ஏற்படுங் கேடுகளைப் பொதுமேடைகளின் வாயிலாய் விளங்கிப். பிரச்சாரம் செய்திடவும் வேண்டும்; அவ்வளவுதான் திட்டம்! ஆனால் எதிலும் தீரமும் வீரமும் தீவிரமும் புதுமையும் மிதந்திட வேண்டுமென்பதில் தணியா ஆர்வமுடைய ஈ.வெ.ரா. தமது தோட்டங்களில் இருந்த சமார் அய்ந்நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நாளில் அடியோடு வெட்டி வீழ்த்தினார்! மலேரியா நோயைத் தடுக்கக் கொசு உற்பத்தியாகும் நீர்த் தேக்கங்களைத் தூர்த்துவிட வேண்டும் என்பதுபோல் தென்னங்கள் அருந்துவதைத் தடுக்கத் தென்னை மரங்களையே அழித்திட வேண்டும் என்பது வாதப்படி சரிதானே? வெறித்தனமான பின்பற்றும் போக்கினால் அங்கே அறிவுக்கு முதலிடம் தரவில்லை ஈ.வெ.ரா! தலைவன் கட்டளையைக் கண்மூடித்தனமாகத் தாம் பின்பற்றியதால், தமது தொண்டர்களும் தமது ஆணையை அவ்வாறே நிறைவேற்றிட வேண்டுமென அவர் எதிர்-