பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தந்தை பெரியார்


கல்வி அறிவில்லாமல் வளர்ந்த நாகம்மை மணமான பின்பு, பொறுப்புள்ள நல்ல குடும்பப் பெண்ணாக வாழ்ந்து காட்டினார்.

அதேசமயம் -

கணவரைப் பலசமயம் தன் வீட்டாரிடம் விட்டுக் கொடுக்காமலும் -

வெளியுலகில் தன் கணவரது பொதுத் தொண்டுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுத்து -

கணவர் சிறைபுக நேர்ந்தால், அவர் விட்ட இடத்திலிருந்து தொண்டைத் தொடர்ந்து போராடி - சிறைக்கும் அஞ்சாமல் வீரசாகசம் புரிந்த ஒப்பற்ற வீராங்கனையாக வாழ்ந்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றவர் நாகம்மையார்.

காந்திஜிக்கு வாய்த்த கஸ்துரிபாய் போல; ஈ.வெ.ரா. வுக்கு நாகம்மை கிடைத்தார்.

ஆனால் -

கஸ்தூரிபாயை இழந்தபோது ஒரு குழந்தையைப் போல காந்திஜி அழுதார்.

ஈ.வெ.ராவோ -

இறந்துபோன மனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்தார்.

பற்றற்ற துறவிபோல, அன்றிரவே திருச்சிக்குப் புறப்பட்டார்.

அங்கு சென்ற ஈ.வெ.ரா. அரசு விதித்திருந்த 144 - தடை உத்தரவை மீறினார்.

கைதுசெய்யப்பட்ட ஈ.வெ.ரா. பிறகு விடுதலையானார்.