பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தந்தை பெரியார்


மகாநாட்டின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரியாரோ -

இந்தி எதிர்ப்புப் போரில் சிறை வாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

சிறையில் பெரியார் நூறு நாட்களுக்கு மேலாகத் துன்பங்களை அனுபவித்தார்.

அவர் உடல்நலம் குன்றியது. வயிற்றுப் போக்கும், காய்ச்சலும் வந்து அவரை வாட்டியது.

சிறையில் பெரியாரின் உடல் நிலையைக் கேட்டு, தமிழ் மக்கள் உள்ளம் கொதித்தார்கள்.

கிளர்ச்சி மூளும் என்ற பயத்தில், அரசு 1931 மே மாதம் 22ம் நாள் விடுதலை செய்தது.

விடுதலையடைந்து பெரியார் இன்னும் வீராவேசமாகச் செயல்பட்டார்.

'தமிழர் சுயாட்சி பெற வேண்டும்', என்கிற தனது நீண்ட நாளையக் கருத்தை -

'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முதல் முழக்கமாக 17.12.1939 ம் நாள் தனது குடி அரசுப் பத்திரிகையில் எழுதிப் பிரசுரம் செய்தார்.

இந்தக் கட்டுரை தமிழ் மக்களை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்கச் செய்தது.

அத்துடன் -

கட்டாய இந்தி திணிப்பு காரணமாகவும்; பெரியாரின் ஆவேச இந்தி எதிர்ப்பு பிரசாரத்தினாலும்