பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

137


உலகின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது பற்றிய அறிவியல் கட்டுரைகளை தனது குடி அரசுப் பத்திரிகையில், 30.01.1936-ம் ஆண்டிலேயே பின் வருமாறு எழுதினார்.

'மக்கள் பிறப்புக் கூட இனி அருமையாகத் தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும், பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமல் போய்விடும் என்று எழுதினார். அது மட்டுமா!

★ 'சோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகள் (TEST TUBE BABIES) பிறக்கும்' - என்று எழுதினார்.

★ 'தொலைக்காட்சிக் கருவிகள் கண்டுபிடிக்கப்படும்' என்றும்;

★ மக்கள் பசியைப் போக்க வல்ல உணவு மாத்திரைகள் கண்டு பிடிக்கப்படும்' என்று எழுதினார். (விண்வெளி வீரர்கள் இன்று பயன்படுத்தும் உணவு மாத்திரைகளே இவை)

அறுபது ஆண்டகளுக்கு முன்பே, இத்தகைய தீர்க்க தரிசனத்துடன் பெரியார் எழுதிய அறிவியல் கட்டுரைகள் அவரை - உலக விஞ்ஞானிகள் வரிசையில் உயர்த்தி விட்டது.

சேலத்தில் நீதிக் கட்சியின் 16 - வது மகாநாடு நடைபெற்றது.