பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தந்தை பெரியார்


சற்றும் எதிர்பாராமல் அண்ணா தம்முன் வந்து பணிவுடன் நின்றதைக் கண்ட பெரியார் எழுந்து வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்தார். மறுநிமிடம் மகிழ்ச்சிப் பெருக்குடன் அண்ணா, பெரியாரின் கரங்களை இறுகப் பற்றிய வண்ணம் "இந்த ஆட்சியைத் தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்" என்றார். நன்றிப் பெருக்கால் பெரியாரின் விழிகளில் கண்ணீர் பளபளத்தது.



37. தாய்ப் பறவையைத் தேடி...

"போட்டி, தேர்தல் வரைத்தான் இருக்க வேண்டும். தேர்ந்தெடுத்து உள்ளே வந்துவிட்டால், இருவரும் சேர்ந்து காரியம் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும்."

- தந்தை பெரியார்

வெள்ளை மனம் படைத்த அண்ணாவின் அளப்பரிய செயல், தோல்வியின் துயரத்தில் துவண்டு போயிருந்த தந்தை பெரியாரை -

வெற்றிக் களிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.

இடையில் கழிந்த பதினேழு ஆண்டுகள் மறைந்து போய், ஆதியில் கண்ட அண்ணாதான் பெரியாரின் கண்களில் தோன்றினார்.

கருத்து பெரியாரின் ஆசி பெறாமலே, தனி திராவிட முன்னேற்றக் கட்சியைத் துவக்கியவர் அறிஞர் அண்ணா!