பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

37



5. பள்ளிக்கூடம்
சிறைக்கூடம் போல் தோன்றியது

"என்னைப் பொறுத்தவரை நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல், எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச் சக்தி உண்டு என்று நம்புகிறவன்."

- தந்தை பெரியார்

அன்று இரவு, இராமசாமியின் தந்தைக்கும் உறக்கம் வரவில்லை. வெங்கடப்ப நாயக்கர் இறைவனுடைய திருவிளையாடலை எண்ணி வியந்தார். படிக்க வேண்டும் என்கிற ஆசையிருந்தும், ஏழைக் குடும்பத்தில் பிறந்ததினால் தனக்குக் கல்வி எட்டாக் கனியாக இருந்தது. அதை அவரால் ஒப்புக் கொள்ள முடிந்தது. ஆனால் - இராமசாமிக்கு என்ன குறை?

ஏன் பள்ளிக்கூடம் வேண்டாம் என்கிறான்; படிப்பில் விருப்பமே இல்லாமல் இருக்கிறானே! தான் படிக்காததினால்தானே, கூலி வேலை செய்து பிழைக்க வேண்டியிருந்தது.

ஒருவேளை, தன்னைச் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை என்று எண்ணிக் கொண்டு அவன் இப்படி நடந்து கொள்கிறானா! நிலையில்லாத இந்தச் செல்வங்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகலாம்; கல்வி ஒன்று தானே நிலையான, அழியாச் செல்வம்!

இதை அவன் மறுக்கலாமா?

கடையில் எப்போது வேண்டுமானாலும் அவன் வந்து உட்கார்ந்து கொண்டுவிட முடியும்; ஆனால் -