பக்கம்:தனி வீடு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டிர் മുക്കഥ - 1 1 5

மதிப்பை விளக்குகிறது. ஒரு பெரிய விருந்து நடக்கிறது. நூல் ஆயிரம் படித்த பெரியவன் ஒருவன் அந்த விருந்துக் குப் போகிருன். ஒன்றும்ே படிக்காத அறிவிலி ஒருவன் வருகிருன். புலவன் சிறிய மேல் துண்டும் சாதாரண வேட்டியும் அணிந்து கொண்டு கடந்து வந்து உள்ளே நுழைகிருன். அவன் ஏழை. ஆனல் அறிவிலியாக இருப் பவன் பணம் படைத்தவன்; நல்ல ஆடை அணிகளைப் புனைந்து கொண்டு காரில் போய் இறங்குகிருன். விருந் துக்கு வருகிறவர்களே வரவேற்பதற்காக அங்கே கிற்பவர் கள் யாருக்கு அதிகமாக வரவேற்பு அளிப்பார்கள்? எல்லாம் படித்த புலவயிைற்றே ஒழுக்கத்தில் சிறந்தவன் ஆயிற்றே என்று எண்ணி கல்ல மேலாடை இல்லா விட்டாலும், புலவனுக்கு மரியாதை செய்வார்களா? அப்படி இன்னும் இந்த உலகம் வளரவில்லை. கார் வந்து கின்றவுடன் அதில் வந்து இறங்கிய கற்றறியா மூட னுக்குக் கைலாகு கொடுத்து வரவேற்பார்கள். பன்னி ரைத் தெளிப்பார்கள். பூச்செண்டைச் செருகி மூன்று நான்கு பேர்களாக உள்ளே அழைத்துப் போவார்கள். படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றைவிடப் பணமே உலகில் மதிப்பைப் பெறுகிறதென்பதற்கு இது அடையாளம் அல்லவா? பணக்காரன் தன்னிடத்தில் உள்ள பணத்தை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குப் படாடோபமான ஆடைகளை அணிகிருன். ஒழுக்கத்தில் தளர்ந்தவகை இருந் தாலும், அறிவிலே குறைந்தவகை இருந்தாலும், அவன் தன்னிடத்திலுள்ள பணத்தை ஆடையாலும் அணியாலும் ஆடம்பரத்தாலும் விளம்பரம் செய்து கொள்வதைக் கண்டு உலகம் மயங்குகிறது. - . . .

இதை நினைத்து ஒரு புலவர் வேடிக்கையாக ஒரு பாட்டுப் பாடுகிரு.ர். உலகிலுள்ள மனிதர்கள் மாத்திரமா மயங்குகிருர்கள்? எங்கேயும் இத்தகைய இழிகிலே காணப் படுகிறது. பாற்கடல் இத்தகைய காரியம் ஒன்றைச் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/125&oldid=575936" இலிருந்து மீள்விக்கப்பட்டது