பக்கம்:தனி வீடு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தனி வீடு

படையைப் பெருக்குதல்

உலகைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப் பெரிய வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டு அணுக் குண்டுகளையும், பிற விஞ்ஞான அற்புத விளைவான படைக்கலன்களையும் உற்பத்தி செய்கின்றன. அந்தப் பழங்காலத்தில் தேர், கரி, பரி ஆகியவற்றை மிகுதியாகச் சேர்த்துக் கொண்டார்கள். சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று சொல்லலாமா? அவர்கள் மனத்தில் அமைதி இராமல் இருந்தது. இன்று அமெரிக்கா வும், ரஷ்யாவும் படைக்கலங்களைப் பெருக்கிக் கொண்ட தல்ை ஒரு கணமும் அமைதியில்லாமல் வாழ்கின்றன. அவர்களுடைய உள்ளத்தில் மனக்கலக்கம் எழுந்திருக் கிறது. இதைத்தான் கெடுபிடியுத்தம் (Co d War) என்று. சொல்கிருர்கள். -

தேரையும் கரியையும் பரியையும் சேர்த்துப் படை யைப் பெருக்கியவன் சும்மா இருக்கமாட்டான். இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இரா என்பார்கள். இரும்பு என்பது படைக்கலத்தைக் குறிப்பது. படையை வைத்துக் கொண்டிருக்கிறவன் அமைதியாக வீட்டில் இருக்கமாட்டான். ஊரைச் சுற்றி வீட்டைச் சுற்றியுள்ள எல்லோரையும் அடிமைப்படுத்த வேண்டுமென்று திரிவான். அவனே யார் எதிர்ப்பட்டா லும் அவருக்குத் தீங்கு உண்டாகும். பிறருக்குத் தீங்கை விளக்கும் மனிதன் தனக்கும் தீங்கை விளைத்துக்கொள்

கிருன். -

. (2)

இத்தகைய அரச பதவியையும், செல்வத்தையும்

த்தகைய அரச பதவியையும், செல்வத்தையும்

அல்கிருயே, பாவி நெடுநெஞ்சமே!" என்று அருண்கிரி யார் சொல்கிரு.ர். ー・ベ. - - ..:ミ・ ・ " 、・・・ ・リ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/130&oldid=575941" இலிருந்து மீள்விக்கப்பட்டது