பக்கம்:தனி வீடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை | 2 |

தண்டு தாவடி போய்த், தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம், நீரில் பொறி என்று

அறியாத பாவி நெடுநெஞ்சமே!

நெடுகெஞ்சம்

நாம் செய்கிற காரியங்கள் எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பது நெஞ்சு. நாம் செய்வன யாருக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நெஞ்சுக்குத் தெரி யாமல் இராது தன் நெஞ்சு அறிவது பொய்யற்க' என் பார் திருவள்ளுவர். அதல்ை வேறு ஒன்றைப் பார்த்துச் சொல்வதைவிட மூலக்கருவியாகிய நெஞ்சையே பார்த்து அருணகிரியார் சொல்கிரு.ர்.

நெடு கெஞ்சமே!

=நெஞ்சமே, நீ என்னுடன் நீண்டகாலமாக வாழ்கிருய். இந்த உடம்போடு வந்தாய் என்பது மட்டுமன்று நான் எடுக்கும் பிறவிகளில் எல்லாம் துணையாகவும், சாட்சியாக வும் தொடர்ந்து வருகிருய். இந்த நீண்ட கட்பு எனக்கும் உனக்கும் இருக்கிறது' என்று எண்ணியே நெடு கெஞ் சமே என்ருர். இதற்கு மற்ருெரு பொருளும் சொல்ல லாம். நமக்கு உடம்பு, வாக்கு, நெஞ்சு ஆகிய மூன்று கரணங்கள் இருக்கின்றன. இந்த மூன்றில் நம்முடைய உடம்பு ஒர் எல்லேக்குள் இயங்கும். நம்முடைய கை ஒர் எல்லைவரைதான் எட்டும். நான் இந்த இடத்தில் இருந்து பேசுகின்றேன். இதே சமயத்தில் என் வீட்டில் இருக்க முடியாது. இந்த உடம்பு ஓர் எல்லேக்குள் கட்டுப் பட்டிருக்கிறது. ஆல்ை உடம்பில்ை எட்ட முடியாத எல்லையை வாக்கினல் எட்ட முடியும். அதற்கும் ஓர் எல்லே உண்டு. ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கிருேம். "என் கெஞ்சில் இருக்கிறது; சொல்ல வரமாட்டேன் என் கிறதே' என்று சில சமயங்களில் சொல்கிருேம். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/131&oldid=575942" இலிருந்து மீள்விக்கப்பட்டது