பக்கம்:தனி வீடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இருவகை விளையாட்டு

4.

! பிரபஞ்சம் என்பது ஒரு விளையாட்டு மேடை. இந்த மேடையில் விளையாடும் உயிர்க்கூட்டங்கள் குழந்தைகள். குழந்தைகளுக்குத் தலைவனாக இருக்கும் குமர குருபரனும் குழந்தையே. குழந்தைகளுக்கு விளையாடுவது இயல்பு. நாம் செய்கின்ற விளையாட்டு வேறு வகை. -

விளையாட்டு வகை

உடம்பென்னும் ஊனக் குடிசையில் புகுந்து நாம் செய்யும் செயல்கள் மேன்மேலும் உடம்பை அடையும்படி செய்கின்றன. மனத்தினலே தினப்பது, வாயினுலே பேசு வது, உடம்பினால் செயல் செய்வது ஆகிய எல்லாச் செயல் களும் மீட்டும் பிறவி விளைவதற்கு விதைகள் ஆக இருக் கின்றன. இப் டி. இருக்கும் இந்த விளையாட்டு ஒரு விதம்.

ஆண்டவனே மாயா விளையாட்டு விகளயாடும் குழந் தைகளுக்கு கடுவில் ஞான விளயாட்டு விளையாடுகிருன்: அவன் ஞான விளையாடல் புரிவதால் ஊன விளையாடல் புரியும் சிலராவது அவன் திருவருளேப் பெறுகிருர்கள். சிலர், பெறவில்லையே!' என்று கின்ேக்கிருர்கள். இன்னும் சிலர், பெறலாம்' என்று கம்பிக்கையோடு இருக்கிருர்கள். சிறந்த சான்றேர்கள் ஊன நாடகம் ஆடும் உலகத்தவருக்கு ஞான நாடகம் ஆடுகின்ற நாயகன் இருக்கிருன் என்ற கினைப்பை ஊட்டுகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/29&oldid=575840" இலிருந்து மீள்விக்கப்பட்டது