பக்கம்:தனி வீடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 0 - தனி வீடு

இவ்வாறு உலகமாகிய விளையாட்டு மேடையில் ஞான விளையாடல், ஊன விளையாடல் ஆகிய இரண்டும் நிகழ் கின்றன. ஊனம் என்ருல் உடம்பு. இந்த உடம்பு நாம் செய்த புண்ணிய பாவ வினேகளால் வந்தது. மாயா விளையாடல் காரணமாக வினைகள் உயிர்களைச் சாரு கின்றன. உலகத்தில் நடைபெறும் ஊன விளையாட்டு அத்தனைக்கும் மாயை காரணம். அது உலகத்திலுள்ள மக்களே எல்லாம் இயக்குகிறது. இறைவன் திருவருள் அன்பர்களே இயக்குகிறது. அவன் திருவருளால் உண்டா கும் விளையாட்டு ஞானத் திருவிளையாட்டு. மாயை யினுடைய ஆற்றலால் விளைவது மாயை விளையாட்டு; அல்லது ஊன விளையாட்டு. -

மாயையும் மனமும்

மாயை அகண்டமாக இருப்பது. வினைக்குக் காரணம் செயல், செயல்களுக்கு மூலம் மனம். மனத்தின் செயலே பிறவியாக விளேகிறது. அந்த மனத்தைக் கண்டமான மாயை என்று சொல்லலாம். மாயை என்ற தாய்க்கு மனம் என்பது ஒரு குழந்தை. கந்த புராணம், மாயைக்குச் சூரன் பிள்ளேயாகப் பிறந்தான் என்று கூறுகிறது. இந்த மனமும் குரனைப் போன்றதே. பிழம்பாக இருப்பது, தனி யாக இருப்பது என்று இரண்டு வகை உண்டு. பிழம்பைச் சமஷ்டி என்றும், தனியை வியஷ்டி என்றும் சொல்வார் கள். தோப்பு என்பது சமஷ்டி, மரம் என்பது வியஷ்டி. தோப்பு என்பது முழுமையையும் குறிப்பது; தொகுதியைக் குறிப்பது. மரம் ஒன்றைக் குறிப்பது, தொகுதியாக உள்ள பிழம்பில் மரம் ஒர் உறுப்பு. மக்கள் என்பது சமஷ்டி; மனிதன் என்பது வியஷ்டி. அவ்வாறு மாயை என்பது பிழம்பு அல்லது சமஷ்டி; மனம் தனி அல்லது வியல்,டி. மாயையின் குஞ்சு மனம். மனம் எங்கே இருக்கிற்கோ அங்கே மாயையின் விலாசம் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/30&oldid=575841" இலிருந்து மீள்விக்கப்பட்டது